Saturday, September 27, 2008

இராஜாதிராஜன்

இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும். இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியரோடு போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் நடைபெற்ற போரில் இறந்தான்.


முதலாம் இராஜேந்திரனின் மக்கள்

வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.

இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் இராஜாதிராஜன் என்று வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திரனை அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இராஜாதிராஜனின் 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் இராஜாதிராஜனுக்கு பெருந்துணையாக இருந்தான் என்பதை இராஜேந்திரன் கூறுகிறான். வீரராஜேந்திரன் என்பவன் இராஜேந்திர தேவனின் தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை இராஜேந்திரன் அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன.

இளவரசன் ராஜ மகேந்திரன்

ராஜாதி ராஜனின் மைந்தன் பெயர் ராஜ மகேந்திரன், தந்தையை போலவே மகனும் ஒரு மிகப் பெரிய வீரன் என்ற பெயர் பெற்றான். இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு முன் இவன் சோழ நாட்டினை ஆட்சி செய்தான் என்றும் கூருவர். ஆனால் சரித்திர சான்றுகள் கூறுவது யாதெனின், ராஜ மகேந்திரன் ராஜாதி ராஜன் காலத்தில் இளவரசு பட்டம் பெற்றான் ஆனால் மன்னனாக ஆகவில்லை. மேலும் இவன் பாண்டிய சோழன் என்ற பெயரஇல் பாண்டிய தேசத்தில் பதவி வகித்தான். இந்த ராஜ மகேந்திரனே ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ராஜ மகேந்திரன் பிரகாரத்தை கட்டியவன்.

இலங்கைப் போர்

ராஜேந்திரனின் காலத்தில் இலங்கையின் மன்னன் மகிந்தன் கைது செய்யப் பட்டு சோழ நாட்டில் சிறைதனில் அடைக்கப் பட்டன். அவன் பன்னிரு மாதங்கள் சிறையில் இருந்து பின் இறந்தான் என மகாவம்சம் கூருகின்றது. மகிந்தனின் மைந்தன் காசப்பா தன் நாட்டின் வளர்ச்சி தனிக் கருத்தில் கொண்டு சோழர்களை எதிர்த்து நிர்க்கின்றான். புரட்சி தீயை சுடர் விட்டு பிரகாசிக்கின்றான் ராஜாதி ராஜ சோழனின் காலத்தில். ஆனால் சோழர்கள் வீறு கொண்ட காலமாதலால் காசப்பாவின் புரட்சி வேள்வி அழிந்து போனது.

வீறு கொண்டு எழுந்தான் காசப்ப்பவின் புதல்வன் விக்ரமபாகு. விக்கிரம பாண்டியனின் துணைக் கொண்டு ரோகனதிளிர்ந்து தொடர்ந்தான் தன் விடுதலைப் போராட்டத்தை. ராஜாதி ராஜனின் மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் விக்கிரமபாகுவின் போராட்டங்கள் தொடர் தோல்விதனை அடைந்தன. தோல்வியை மட்டுமே கண்ட விக்கிரம பாகுவின் மனதிலே வீற்றிருந்தது விடுதலை என்னும் தாகம். தனது தாகத்தினை தன் மகன் விஜயபாகுவிற்கு போதித்தான் விக்கிரமபாகு. இவ்வாறு தொடர்ந்து இலங்கையில் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. ராஜ ராஜனின் காலத்தில் ஆரம்பித்த இந்த இலங்கையின் விடுதலை போராட்டம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்தது சோழர்களின் வீழ்ச்சி வரை.

சாளுக்கிய பெரும் போர்கள் :

கம்பிளி ஜெயஸ்தம்பம்

கலிங்கத்து பரணியில் குறைப்படும் ராஜாதி ராஜனின் புகழ் கிரீடத்தில் சொல்லப் படும் வெற்றி இந்த கம்பிளி ஜெயஸ்தம்பம். சோழர்களுடன் தொடர்ந்து போர் புரிந்த ஓர் அரசு சாளுக்கிய அரசு , ஒருவரை வென்று இன்னொருவர் தங்கள் புகழினையும் எல்லைதனையும் விஸ்தரித்த கதை அது.

சாளுக்கியர்களின் மன்னனாக சொமேச்வரன் முடி ஸூடிய போதினில் ஆரம்பித்த போர் இது. வேங்கி எனபது இந்த இரு மன்னர்களின் நடுவினில் சிக்கிக் கொண்ட ஓர் தேசமாகவே கருத வேண்டும். வெங்கியின் சரித்திரம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று, ஏன் எனில் குலோத்துங்கனின் கதையின் பிறப்பிடம் அது தான்.

கிருஷ்ணை நதியின் கரைதனில் நடந்தது அந்தப் போர். ஓர் கழுகு தான் மிகவும் உயர்ந்த அளவில் பறக்கிறோம் தன்னால் புவிதனில் நடக்கின்ற எதையும் காண முடயும் என்ற இறுமாப்பில் பறந்துக் கொண்டிருந்தது . அந்தோ அங்கே ஒரு குன்று திடுமென்ன ஓரிடத்தில் முளைத்திருந்ததினைக் கண்டு யாது அந்த குன்று என தெரிந்துக் கொள்ளும் பொருட்டு உயரப் பறந்தது. கழுகிற்கு அந்தக் குன்றின் முதலும் தெரியவில்லை முடிவும் தெரியவில்லை, இன்னும் சற்று உயரப் பரந்த போது தான் அதற்குத் தெரிந்தது அது கிருஷ்ணை நதிக் கரை என்பது. அங்கே நிகழ்ந்த போரினால் இறந்த வீர்களின் உடல் தான் அந்த திடீர் குன்றின் காரணம் என்பதை புரிந்தது. தனக்கு அனைத்தும் தெரியும் என்று இறுமாப்பில் இருந்த கழுகிற்கு புரிந்தது அங்கே நடந்திருக்க கூடிய போரினைப் பற்றி.

மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் ராஜாதி ராஜன் வெற்றிகரமாக வெற்றி தேவியினை தன் பக்கம் கொண்டு சாளுக்கியர்களின் தலைநகரம் கல்யாணி என்னும் நகரத்தினை கொளுத்தி தன் வெற்றிதனை ஜெயஸ்தம்பம் கொண்டு நிறுவினான். இப்போருக்கு பின் வாணகோவரையன் வேண்டுகொல்லுக்கு இணங்க சக்கரவர்த்தியை மகுடம் கொண்டான் ராஜாதி ராஜன். இப்போரினில் வாணகோவரையன் இறைமை எய்தினான்.

இரண்டாம் சாளுக்கிய போர் (கொப்பத்து போர்)

சொமேஸ்வரனின் தோல்விக்கு பின் அவனது மகன் ஆகவமல்லன் சாளுக்கிய தேசத்தின் ஆட்சி பொறுப்பினை பெற்றான். எல்லைப்புறத்தில் இருந்த சோழர்களை துரத்தினான். இந்த காலத்தில் தான் இலங்கையிலும் போர் நடந்துக் கொண்டிருந்தது. விக்கிரமபாகுவின் மரணத்திற்கு பின் மீண்டும் சாளுக்கியர்களுடன் போர் தொடர்ந்தான் ராஜாதி ராஜன். தன் மகனை இழந்திருந்த ராஜாதி ராஜன் தன் தம்பி இரண்டாம் ராஜேந்திரனை இளவரசனாய் அறிவித்தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான், தம்பிகள் உடையான் படை எடுக்கவே அஞ்சுவான்". இரண்டு தம்பிகளும் போரிற்கு செல்ல முன் நிற்க தன் இல்லையா தம்பி தனை சோழ தேசத்தினில் தங்க செய்து, இலங்கை மீதும் பாண்டிய தேசம் மீதும் கருத்தினை இருக்கவும் அவனது பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்றும் ராஜேந்திரன் படை வீட்டில் மட்டும் தான் இருப்பான் போரினை தான் தான் முன்னின்று செய்ய போவதாகவும் கூரி இளையவனை சோழ நாட்டில் இருக்க செய்தான்.

ராஜாதி ராஜனை படை வீட்டில் இருத்தி தான் போருக்கு செல்வதை கூரிய முதல் தம்பியிடம் "நீ படைவீடின் பின்னால் இருப்பதால் நம்மை பின்னால் இருந்து சாளுக்கியர்கள் தாக்க முயலும் போது நீ தான் அவர்களது முதல் குறியாய் இருப்பை. உன்னை ஆபத்து எப்போதும் சூழ்ந்திருக்கும்" என்று கூரி. இரண்டாம் ராஜேந்திரனை படை வீட்டில் இருத்தி, போருக்கு முன் நின்றான் ராஜாதி ராஜன் என்னும் சோழ மாவீர சக்கரவர்த்தி.

மாதண்ட நாயகன் பராந்தகன் ஏற்றான் போரின் திட்டத்தினை, ராஜாதி ராஜனின் விருப்பம் போல் நிகழ்ந்தது போர். பராந்தகனிடம் தோற்றான் ஜெயசிம்மன் என்னும் ஆகவமல்லன் தளபதி. வேங்கியின் மன்னன் ராஜ நரேந்திரன் சோழர்களின் யானைப் படைத்தனை கையாண்டான். வெற்றி தேவதை ராஜாதி ராஜனின் வீர வாளினையும் அவன் கரங்களையும் பிடித்திருந்தால். சுது செய்தனர் சாளுக்கியர்கள்...

தன் பட்டத்து யானை மீதிருந்து போர் செய்துக் கொண்டிருந்த சோழனை நோக்கி வந்தான் ஆகவமல்லன் துணை இருந்த ஜெயசிம்மன் சமாதானம் சொல்லிக் கொண்டு. அவ்வாறு வந்த ஜெயசிம்மன் திடும்மென்று தன் வீரர்களுக்கு ஆணையிட வீரர்கள் ராஜாதி ராஜனை சூழ்ந்து அம்பு மழை பொழிந்தனர். இவ்வாறு வஞ்சகத்தினை எதிர்பார்க்காத ராஜாதி ராஜனின் மேல் அம்பு மழை பொழிய அவன் அப்போர் களத்தினில் உயிர் விடுகின்றான். பராந்தகன் ஜெயசிம்மனை தன் வேல் கொண்டு கொள்கின்றான், அவனை சூழும் சாளுக்கிய வீரர்களிடம் அவனும் பலியாகிறான்.

தலைமை தாங்க ஆளில்லாத சோழ வீரர்கள் பின் வாங்குகின்றனர். போர்க்களத்தில் நிகழ்ந்ததை உணர்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன் வீறு கொண்டு எழும் வேங்கையாய் உரைக்கிறான் தன் வீரர்களிடம் "அஞ்சேல் அஞ்சேல், வெற்றி அல்லது வீர மரணம். பழி வாங்குங்கள் அந்த சாளுக்கியர்களை". ராஜேந்திரன் தன்னை அப்போர் களத்தினில் தன்னையே மன்னனாக அறிவிக்கின்றான். "யானை மேல் துஞ்சிய ராஜாதி ராஜனின்" உடலினை காப்பாற்றி வீரர்களிடம் ஒப்படைக்கும் ராஜேந்திரன், தன் படையை கட்டுக்குள் கொண்டு வந்தான். வீறு கொண்டு எழுந்த ராஜேந்திரனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் ஆகவமல்லன் தன் படை தனிப் பின்னுக்கு எழுத்து போர்கலத்திளிர்ந்து தப்பித்து ஓடுகின்றான். தன் அண்ணனின் மரணத்திற்கு பழி வாங்கும் பொருட்டு கொப்பம் நகரினை அழிக்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன். வெற்றி வாகை முடிக் கொண்டு சோழத்திற்கு திரும்புகின்றான் இரண்டாம் ராஜேந்திரன்.

தன் இறுதி காலம் வரை போர்களத்திலேயே இருந்து சோழ மகா சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்துகின்றான் ராஜாதி ராஜ சோழன். தன் தந்தை காலத்தினில் போர்கலதினில் நுழைந்த ராஜாதி ராஜன் தன் மூச்சு முடியும் மட்டும் மகா வீரனாக உலா வருகின்றான்.

போர் தவிர ஏனைய விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லாதவன் என்னினும் இவன் காலத்தில் சிதம்பரம் தில்லை நாதர் ஆலயத்தில் போற்குறை வேயப் பட்டிருக்கின்றது. ஸ்ரீரங்கனதார் கோயிலிற்கு பிரதான சுற்று சுவர் எழுப்ப பட்டிருக்கின்றது.

திரலோக்கியம் என்ற ஒரே ஒரு மனைவியைக் கொண்டவன். சோழர்களின் ராமனாக இருந்தவன். மகனையும் போரினால் பழி கொடுத்தவன். சோழர்களின் புகழிற்காக உயிரை மாய்தவன் இந்த வீர திருமகன்.

No comments: