Sunday, December 14, 2008

இந்திரா விழா

புகார் நகரினைப் பற்றி எழுதுங்கால் இந்திரா விழாவினைப் பற்றி குறிப்பிட்டு சொல்லாதிருந்தால் புகாரின் சிறப்பு தெரியாமலேயே போய் விடும் .

சோழர்கள் சூரிய மரபினர் என்றும் குறிப்பிடப் படுவர். அசுரர்களை எதிர்த்த இந்திரநிற்கு சோழர்கள் உதவினார் என்றும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பட்டினப்பாக்கமும் மருவ்வுர்பாக்கமும் இணைகின்ற இடத்தின் நடுவே இருந்த நாளங்காடி என்ற இடத்தினில் பலிபீடம் கொண்டு இருக்கும் பூதத்தினை இந்திரன் பூமிக்கு அனுப்பினான் என்று சொல்லப் படுகின்றது.

சோழர்கள் போரினால் வெற்றிப் பெற இந்த பூதம் துணை செய்கின்றது என்பதனால் பூததினைப் போற்றும் விதமும், இந்திரனை வணங்கும் விதமுமாக இந்த இந்திர விழா புகார் நகரினில் ஆண்டு தோறும் நடைப் பெற்றது. சித்திரை மாது சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் இந்த விழா நடக்கும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இயம்புகின்றார்.

இந்த இந்திர விழாவினில், புகார் நகரத்தில் உள்ள அனைத்து வித மக்களும் எவ்வித பேதமும் இன்றி மகிழ்வுடன் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து இன்புறுவர். புகார் நகரினில் இருந்த யவனர்கள், அரபியர்கள், தமிழர்கள், கடல் கடந்து வந்த மக்கள் என அனைவரும் இந்த இருபத்தெட்டு நாட்களிலும் பங்கு பெறுவர் என்றும், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிகழும். கடல் சூழ்ந்த இந்த புகார் நகரினில் இரவினில் தீப பந்தல்களின் நடுவே கலை நடனமும், பற்பல கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை நிலைநிறுத்தி போட்டி புரிவர்.

ஆகா, இந்திர விழா புகார் வாழ் மக்கள் அனைவரின் இன்பக்கரமான நாட்களாய் இருந்து வந்தமையை நாம் அறியலாம்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்

"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.

முதலாம் பாண்டிய போர்

தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.

போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்

வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.

தெலுங்கு சோழர்களுடன் நட்பு

மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.

போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை

குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்

பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

Wednesday, December 10, 2008

மூன்றாம் ராஜ ராஜ சோழன்

சுந்தர பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராஜ ராஜன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதியா அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமையம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன்.

மூன்றாம் ராஜ ராஜ சோழன் சோழர்கள் வம்சா வழியில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலில் நிழலில் இருந்த ராஜ ராஜ சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காக காத்திருந்த பாண்டியன், தக்க சமயத்தில் படை எடுத்து வந்து சோழ சாம்ராஜ்யத்தை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரை படை எடுத்து வந்து சோழனை பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராஜ ராஜ சோழன் தோற்று திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜ ராஜ சோழன்.

கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை

சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராஜ ராஜ சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்கு கட்ட வேண்டிய கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரினால் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.

போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்கு பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராஜ ராஜ சோழனுக்கு அடி பணியாமல் ராஜ ராஜனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரை சென்று கொப்பெருஞ்சின்கனின் செல்வங்களை கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராஜ ராஜ சோழனை சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான்.

ராஜ ராஜ சோழனை மீட்ட பின்பு காவேரி கரை வரை சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரி கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகையைக்கு உட்பட்டு, அவர்களது ஆட்சியை சார்ந்தே இருந்தனர்.

வீர நரசிம்மன்

பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன். சோழர்களை பழையாறை நகரசும் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் மீது திரும்பக் கூடும் என்று சந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான் போசளன்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்

தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராஜ ராஜ சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது ஆட்சியின் நாற்பதாம் ஆண்டு தனது மகன் மூன்றாம் ராஜேந்திர சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சி ஆண்டிலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.