Saturday, September 27, 2008

இராஜாதிராஜன்

இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும். இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியரோடு போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் நடைபெற்ற போரில் இறந்தான்.


முதலாம் இராஜேந்திரனின் மக்கள்

வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.

இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் இராஜாதிராஜன் என்று வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திரனை அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இராஜாதிராஜனின் 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் இராஜாதிராஜனுக்கு பெருந்துணையாக இருந்தான் என்பதை இராஜேந்திரன் கூறுகிறான். வீரராஜேந்திரன் என்பவன் இராஜேந்திர தேவனின் தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை இராஜேந்திரன் அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன.

இளவரசன் ராஜ மகேந்திரன்

ராஜாதி ராஜனின் மைந்தன் பெயர் ராஜ மகேந்திரன், தந்தையை போலவே மகனும் ஒரு மிகப் பெரிய வீரன் என்ற பெயர் பெற்றான். இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு முன் இவன் சோழ நாட்டினை ஆட்சி செய்தான் என்றும் கூருவர். ஆனால் சரித்திர சான்றுகள் கூறுவது யாதெனின், ராஜ மகேந்திரன் ராஜாதி ராஜன் காலத்தில் இளவரசு பட்டம் பெற்றான் ஆனால் மன்னனாக ஆகவில்லை. மேலும் இவன் பாண்டிய சோழன் என்ற பெயரஇல் பாண்டிய தேசத்தில் பதவி வகித்தான். இந்த ராஜ மகேந்திரனே ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ராஜ மகேந்திரன் பிரகாரத்தை கட்டியவன்.

இலங்கைப் போர்

ராஜேந்திரனின் காலத்தில் இலங்கையின் மன்னன் மகிந்தன் கைது செய்யப் பட்டு சோழ நாட்டில் சிறைதனில் அடைக்கப் பட்டன். அவன் பன்னிரு மாதங்கள் சிறையில் இருந்து பின் இறந்தான் என மகாவம்சம் கூருகின்றது. மகிந்தனின் மைந்தன் காசப்பா தன் நாட்டின் வளர்ச்சி தனிக் கருத்தில் கொண்டு சோழர்களை எதிர்த்து நிர்க்கின்றான். புரட்சி தீயை சுடர் விட்டு பிரகாசிக்கின்றான் ராஜாதி ராஜ சோழனின் காலத்தில். ஆனால் சோழர்கள் வீறு கொண்ட காலமாதலால் காசப்பாவின் புரட்சி வேள்வி அழிந்து போனது.

வீறு கொண்டு எழுந்தான் காசப்ப்பவின் புதல்வன் விக்ரமபாகு. விக்கிரம பாண்டியனின் துணைக் கொண்டு ரோகனதிளிர்ந்து தொடர்ந்தான் தன் விடுதலைப் போராட்டத்தை. ராஜாதி ராஜனின் மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் விக்கிரமபாகுவின் போராட்டங்கள் தொடர் தோல்விதனை அடைந்தன. தோல்வியை மட்டுமே கண்ட விக்கிரம பாகுவின் மனதிலே வீற்றிருந்தது விடுதலை என்னும் தாகம். தனது தாகத்தினை தன் மகன் விஜயபாகுவிற்கு போதித்தான் விக்கிரமபாகு. இவ்வாறு தொடர்ந்து இலங்கையில் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. ராஜ ராஜனின் காலத்தில் ஆரம்பித்த இந்த இலங்கையின் விடுதலை போராட்டம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்தது சோழர்களின் வீழ்ச்சி வரை.

சாளுக்கிய பெரும் போர்கள் :

கம்பிளி ஜெயஸ்தம்பம்

கலிங்கத்து பரணியில் குறைப்படும் ராஜாதி ராஜனின் புகழ் கிரீடத்தில் சொல்லப் படும் வெற்றி இந்த கம்பிளி ஜெயஸ்தம்பம். சோழர்களுடன் தொடர்ந்து போர் புரிந்த ஓர் அரசு சாளுக்கிய அரசு , ஒருவரை வென்று இன்னொருவர் தங்கள் புகழினையும் எல்லைதனையும் விஸ்தரித்த கதை அது.

சாளுக்கியர்களின் மன்னனாக சொமேச்வரன் முடி ஸூடிய போதினில் ஆரம்பித்த போர் இது. வேங்கி எனபது இந்த இரு மன்னர்களின் நடுவினில் சிக்கிக் கொண்ட ஓர் தேசமாகவே கருத வேண்டும். வெங்கியின் சரித்திரம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று, ஏன் எனில் குலோத்துங்கனின் கதையின் பிறப்பிடம் அது தான்.

கிருஷ்ணை நதியின் கரைதனில் நடந்தது அந்தப் போர். ஓர் கழுகு தான் மிகவும் உயர்ந்த அளவில் பறக்கிறோம் தன்னால் புவிதனில் நடக்கின்ற எதையும் காண முடயும் என்ற இறுமாப்பில் பறந்துக் கொண்டிருந்தது . அந்தோ அங்கே ஒரு குன்று திடுமென்ன ஓரிடத்தில் முளைத்திருந்ததினைக் கண்டு யாது அந்த குன்று என தெரிந்துக் கொள்ளும் பொருட்டு உயரப் பறந்தது. கழுகிற்கு அந்தக் குன்றின் முதலும் தெரியவில்லை முடிவும் தெரியவில்லை, இன்னும் சற்று உயரப் பரந்த போது தான் அதற்குத் தெரிந்தது அது கிருஷ்ணை நதிக் கரை என்பது. அங்கே நிகழ்ந்த போரினால் இறந்த வீர்களின் உடல் தான் அந்த திடீர் குன்றின் காரணம் என்பதை புரிந்தது. தனக்கு அனைத்தும் தெரியும் என்று இறுமாப்பில் இருந்த கழுகிற்கு புரிந்தது அங்கே நடந்திருக்க கூடிய போரினைப் பற்றி.

மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் ராஜாதி ராஜன் வெற்றிகரமாக வெற்றி தேவியினை தன் பக்கம் கொண்டு சாளுக்கியர்களின் தலைநகரம் கல்யாணி என்னும் நகரத்தினை கொளுத்தி தன் வெற்றிதனை ஜெயஸ்தம்பம் கொண்டு நிறுவினான். இப்போருக்கு பின் வாணகோவரையன் வேண்டுகொல்லுக்கு இணங்க சக்கரவர்த்தியை மகுடம் கொண்டான் ராஜாதி ராஜன். இப்போரினில் வாணகோவரையன் இறைமை எய்தினான்.

இரண்டாம் சாளுக்கிய போர் (கொப்பத்து போர்)

சொமேஸ்வரனின் தோல்விக்கு பின் அவனது மகன் ஆகவமல்லன் சாளுக்கிய தேசத்தின் ஆட்சி பொறுப்பினை பெற்றான். எல்லைப்புறத்தில் இருந்த சோழர்களை துரத்தினான். இந்த காலத்தில் தான் இலங்கையிலும் போர் நடந்துக் கொண்டிருந்தது. விக்கிரமபாகுவின் மரணத்திற்கு பின் மீண்டும் சாளுக்கியர்களுடன் போர் தொடர்ந்தான் ராஜாதி ராஜன். தன் மகனை இழந்திருந்த ராஜாதி ராஜன் தன் தம்பி இரண்டாம் ராஜேந்திரனை இளவரசனாய் அறிவித்தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான், தம்பிகள் உடையான் படை எடுக்கவே அஞ்சுவான்". இரண்டு தம்பிகளும் போரிற்கு செல்ல முன் நிற்க தன் இல்லையா தம்பி தனை சோழ தேசத்தினில் தங்க செய்து, இலங்கை மீதும் பாண்டிய தேசம் மீதும் கருத்தினை இருக்கவும் அவனது பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்றும் ராஜேந்திரன் படை வீட்டில் மட்டும் தான் இருப்பான் போரினை தான் தான் முன்னின்று செய்ய போவதாகவும் கூரி இளையவனை சோழ நாட்டில் இருக்க செய்தான்.

ராஜாதி ராஜனை படை வீட்டில் இருத்தி தான் போருக்கு செல்வதை கூரிய முதல் தம்பியிடம் "நீ படைவீடின் பின்னால் இருப்பதால் நம்மை பின்னால் இருந்து சாளுக்கியர்கள் தாக்க முயலும் போது நீ தான் அவர்களது முதல் குறியாய் இருப்பை. உன்னை ஆபத்து எப்போதும் சூழ்ந்திருக்கும்" என்று கூரி. இரண்டாம் ராஜேந்திரனை படை வீட்டில் இருத்தி, போருக்கு முன் நின்றான் ராஜாதி ராஜன் என்னும் சோழ மாவீர சக்கரவர்த்தி.

மாதண்ட நாயகன் பராந்தகன் ஏற்றான் போரின் திட்டத்தினை, ராஜாதி ராஜனின் விருப்பம் போல் நிகழ்ந்தது போர். பராந்தகனிடம் தோற்றான் ஜெயசிம்மன் என்னும் ஆகவமல்லன் தளபதி. வேங்கியின் மன்னன் ராஜ நரேந்திரன் சோழர்களின் யானைப் படைத்தனை கையாண்டான். வெற்றி தேவதை ராஜாதி ராஜனின் வீர வாளினையும் அவன் கரங்களையும் பிடித்திருந்தால். சுது செய்தனர் சாளுக்கியர்கள்...

தன் பட்டத்து யானை மீதிருந்து போர் செய்துக் கொண்டிருந்த சோழனை நோக்கி வந்தான் ஆகவமல்லன் துணை இருந்த ஜெயசிம்மன் சமாதானம் சொல்லிக் கொண்டு. அவ்வாறு வந்த ஜெயசிம்மன் திடும்மென்று தன் வீரர்களுக்கு ஆணையிட வீரர்கள் ராஜாதி ராஜனை சூழ்ந்து அம்பு மழை பொழிந்தனர். இவ்வாறு வஞ்சகத்தினை எதிர்பார்க்காத ராஜாதி ராஜனின் மேல் அம்பு மழை பொழிய அவன் அப்போர் களத்தினில் உயிர் விடுகின்றான். பராந்தகன் ஜெயசிம்மனை தன் வேல் கொண்டு கொள்கின்றான், அவனை சூழும் சாளுக்கிய வீரர்களிடம் அவனும் பலியாகிறான்.

தலைமை தாங்க ஆளில்லாத சோழ வீரர்கள் பின் வாங்குகின்றனர். போர்க்களத்தில் நிகழ்ந்ததை உணர்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன் வீறு கொண்டு எழும் வேங்கையாய் உரைக்கிறான் தன் வீரர்களிடம் "அஞ்சேல் அஞ்சேல், வெற்றி அல்லது வீர மரணம். பழி வாங்குங்கள் அந்த சாளுக்கியர்களை". ராஜேந்திரன் தன்னை அப்போர் களத்தினில் தன்னையே மன்னனாக அறிவிக்கின்றான். "யானை மேல் துஞ்சிய ராஜாதி ராஜனின்" உடலினை காப்பாற்றி வீரர்களிடம் ஒப்படைக்கும் ராஜேந்திரன், தன் படையை கட்டுக்குள் கொண்டு வந்தான். வீறு கொண்டு எழுந்த ராஜேந்திரனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் ஆகவமல்லன் தன் படை தனிப் பின்னுக்கு எழுத்து போர்கலத்திளிர்ந்து தப்பித்து ஓடுகின்றான். தன் அண்ணனின் மரணத்திற்கு பழி வாங்கும் பொருட்டு கொப்பம் நகரினை அழிக்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன். வெற்றி வாகை முடிக் கொண்டு சோழத்திற்கு திரும்புகின்றான் இரண்டாம் ராஜேந்திரன்.

தன் இறுதி காலம் வரை போர்களத்திலேயே இருந்து சோழ மகா சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்துகின்றான் ராஜாதி ராஜ சோழன். தன் தந்தை காலத்தினில் போர்கலதினில் நுழைந்த ராஜாதி ராஜன் தன் மூச்சு முடியும் மட்டும் மகா வீரனாக உலா வருகின்றான்.

போர் தவிர ஏனைய விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லாதவன் என்னினும் இவன் காலத்தில் சிதம்பரம் தில்லை நாதர் ஆலயத்தில் போற்குறை வேயப் பட்டிருக்கின்றது. ஸ்ரீரங்கனதார் கோயிலிற்கு பிரதான சுற்று சுவர் எழுப்ப பட்டிருக்கின்றது.

திரலோக்கியம் என்ற ஒரே ஒரு மனைவியைக் கொண்டவன். சோழர்களின் ராமனாக இருந்தவன். மகனையும் போரினால் பழி கொடுத்தவன். சோழர்களின் புகழிற்காக உயிரை மாய்தவன் இந்த வீர திருமகன்.

ராஜாதி ராஜ சோழன்

ராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்தி ஸ்ரீ
திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்
தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய
வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்
குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்
தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல
வெண்குடை நிழலெனத் தாங்குடை நிழற்றித்
திசைதோறும் செங்கோல் ஓச்சி இசைகெழு
தென்னவன் மான பரணன் பொன்முடிப்
பருமணிப் பசுந்தலை போருகல்த தறிந்து
வேணாத் தரசரைச் சோணாட் டோதிக்கிக்
கூவகைத் தரசரைச் சேவக தொலைத்து
வேலைக்கோல் காந்தளுர்ச் சாலைகள mஅருத்தர்பின்
தங்குலத் தவநிபர் நன்குதறு தகிமயில்
அரசியலுரிமை முறைமை லேத்தி
வில்லவர் மீனவர் வேல்குலச்ச லுக்கியர்
வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து
தராதலம் படைத்த திக்கேழும் துதிகேழு
செயங்ககொண்ட சோழ நேனுன்னும் மதிகேழு
கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ
தேவர்க்கு யாண்டு.....

Tuesday, September 23, 2008




ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் எழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் அறமும்
தென்திரை ஈழ மண்டலமும் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழன் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயங்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்டு
ஒலித்தசைய சிங்கன் அளப்பரும் புகழோடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதி குலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமனைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரம் தொல்குலத் திந்திர ரதனை
விளையமார்க் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலதனக் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சாந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் அத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்ம
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தறதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கண்மணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுள் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காபுறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேவிளிம் பங்கமும்
விளைபந்த் துருடை வலைப்பன் தூரூம
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமாளிங்கமும்
தெனக் கலர்போழில் மாநக்க வாரமும்
டுகதர் காவல் கடுமுரன் கடாரமும்
மாப்போருன தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு......












இராஜேந்திரன் மெய்க்கீர்த்தி
[கடாரம் கொண்டான்
]


"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை.இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான்.

பண்ணை
இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம்
இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

ஆதித்தன்- திருவேலங்காட்டுச் செப்பேடு
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

பேரரசன் அருண்மொழி
இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"

1) காந்தளூர்ச் சாலை:
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

2)மலைநாடு
கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.




3)ஈழப் போர்
இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.


மேலைச் சாளுக்கியர்-சத்யாசிரயனுடன் போர்

இரண்டாம் தைலப்பன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது

இராஜேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளை சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் இது கட்டி முடிக்கப்பட்டது.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

Sunday, September 21, 2008

திருவண்ணாமலை

அக்கினியின் பொருளாய் வீற்றிருக்கின்றான் அண்ணாமலையான். மக்களிற்கு நேர்கின்ற குறைகளைத் தீயாய் தீர்க்கின்றானோ அவன். அண்ணாமலையானை பாடாத சித்தனும் இல்லை நினையாத பக்த்தனும் இல்லை. பாரதத்தின் அக்கினி ஸ்தலமாகிய அண்ணாமலைக்கு வராதக் கும்பலும் இல்லை. பூலோகத்தில் வீற்றிருக்கும் அண்ணாமலையானை நினையாதோறும் இல்லை.

கார்த்திகை விளக்கீடு
கார்த்திகை மாதத் பௌர்ணமி நாளில் இக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொருள் தொன்மையானது.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் தானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. பிரம்மன் அன்னம் உரு எடுத்து ஜோதியின் முடியைக் காண பறந்து சென்றான், விஷ்ணுவோ வராக உருவம் எடுத்து ஜோதியின் அடியினைக் காணச் செல்கின்றான். பிரம்மன் ஜோதியின் தலை தனிக் காணச் செல்கையில், ஒரு தாழம்பூ தனிக் காண்கிறார், ஜோதியின் முடிதனைக் காண இயலாது என்பதனை உணரும் பிரம்மன் தாழம்புதனை தனக்கு சாட்சி சொல்லுமாறு பணித்து, விஷ்ணுவிடம் தான் ஜோதியின் தலை தனிக் கண்டேன் என்றும் தாழபுவே அதற்கு சாட்சி என்றுக் கூறுகிறார். விஷ்ணுவோ தன்னால் ஜோதியின் அடிப்பாகத்தைக் காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார். பிரம்மன் பொய் சொன்னதைக் கண்டு பூலோகத்தில் பிரம்மனுக்கு கோயிலே இல்லாமல் போகட்டும் என்றும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூ தனிக் கொண்டு தன்னை யாரும் அர்ச்சிக்க கூடாது என்றும் சிவன் சாபம் இடுகின்றார். அதுமுதல் ப்ரம்மன்னுக்கு கோயிலே போகின்றது, தாழம்புதனைக் கொண்டு சிவனை யாரும் அர்ச்சிபதும் இல்லை. அவ்வாறு தீபமாய் சிவன் தோன்றியத் ஸ்தலமே திருவண்ணாமலை ஆகும்.

அகந்தை தனை எரித்துக் காத்தருளும் இறையாய் ஜோதியாய் விளங்குகின்றார் சிவன். இந்த ஸ்தலமோ கிருதாயுகத்தில் அக்னியாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், துவாபர யுகத்தில் தங்கமாகவும், கலியுகத்தில் மலையாகவும் உருவெடுக்கின்றது எனப்படுகின்றது. இதனைப் பொருட்டே கார்த்திகை தீபமாகிய சொக்கப் பானை விழா நடக்கின்றது.

அர்த்தநாரீஸ்வரர்

கயிலாயத்தில் ஒரு முறை, பார்வதி தேவியார் விளையாட்டாக சிவனின் கண்களை மூடுகின்றார், இதனால் பூலோகம் அறியாமை என்னும் இருளில் சிக்குகின்றது. இந்த இருள் தனை அகற்றும் பொருட்டு பார்வதி தேவியார் பூலோகத்தில் உள்ள பூவலக் குன்று என்னும் இடத்தினில் இறைவனை வேண்டி தவம் இருக்கின்றார். அத்தவத்தினை மகிசாசுரன் என்போன் கலைக்கப் பார்க்கின்றான். ஆதலால் துர்க்கை அவதாரம் எடுக்கின்ற பார்வதியார், மகிசாசுரனை கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் பிரதோஷ நேரத்தில் வதம் செய்கின்றார். சிவன் ஜோதி ரூபமாய்த் தோன்றி துர்கையை தன்னுள்ளே அகப்படுத்தி அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றார்.

அருணகிரிநாதர்
அண்ணாமலையின் மகிமைதனைக் கூறுகையில் அருணகிரிநாதர் பற்றிக் சொல்லாமல் விட இயலாது. அண்ணாமலை சிவனின் ஸ்தலம் ஆனாலும் அருணகிரிநாதருக்கு இது ஒரு முருகனின் அருட்கடல் கூடிய ஸ்தலமாகும்.

தன் பெற்றோரை எழந்த அருணகிரிநாதர் எந்த வித கொள்கையும் இன்றி கன்னியர் இருக்கும் இடமே சொர்க்கம் என்று அவர்களிடத்தே இருக்கத் தொடங்கினார். அருணகிரிநாதரை திருத்த அவரது சகோதிரியார் மிகவும் பாடுபடுகின்றார் ஆனால் அருணகிரிநாதர் எந்த விதப் பற்றும் இன்றி சிற்றின்பத்தில் ஆழ்ந்துக் கிடந்தார். அவருக்கு தொழு நோயி பிடித்தவுடன் எவரும் அவருக்கு துணை வராமல் போகவே அவமானப் பட்டு அக்காவிடம் சொல்லாமல் அண்ணாமலைக் கோவிலின் கோபுரத்திலிருந்து கிழே விழுந்து உயிர்தனை விடுவதற்காக குதிக்கின்றார், ஆனால் அவன் விருப்பம் இன்றி எந்த செயலும் நிகழ்வதில்லை ஆதலால் அவனே தன் பக்தனை காக்கும் பொருட்டு அங்கே தோன்றி அருனகிரினாதரைக் காப்பாற்றி குனப்படுதிவிட்டு மறைகின்றார். இறைவன் தனை உணர்ந்த அருணகிரிநாதர் முருகன் தாழ் பணிந்து அவன் புகழ் பாடித் தொண்டாற்றுகின்றார்.

அருணகிரிநாதரின் புகழும் பரவுகின்றது, அவர் மேல் பொறாமைக் கொள்கின்றான் சம்பந்தன் என்னும் அமைச்சன். இவன் காளியிடன் பற்பல வரங்களை வாங்கியவன் எனக் கூறப்படுகின்றது. காளியின் தீவிரப் பக்தனாகவும் இருக்கின்றான். சம்பந்தன் மன்னரிடம் யார் இங்கே இறைவனை யார் தோன்ற செய்கிறார்களோ அவனே மேலானவன் என்றுக் கூரி அருணகிரிநாதர் அனைவரையும் ஏமாற்றுகின்றார் என்றும் சொல்கின்றார்.

இதன் பொருட்டு ஏற்ப்பட்ட போட்டியில் அருணகிரிநாதரின் உண்மையான வேண்டுதலின் பொருட்டு அங்கே அவதரித்துக் காட்சியளிக்கின்றார்.

கிளிரூபம்

இத்துடன் சம்பந்தனின் பொறாமை முடியவில்லை, அவன் வஞ்சம் தீர்க்க காத்திருக்கின்றார். ஒரு சமயம் மன்னரின் கண்கள் பழுதடைய, சம்பந்தன் பாரிஜாத மலரினைக் கொண்டு வந்தால் பார்வை கிடைக்கும். அதனைக் கொண்டு வருவதற்கு அருணகிரிநாதரால் மட்டுமே முடியும் என்றுக் கூறுகிறார். இதன் பொருட்டு அருணகிரிநாதர் கிளி உருவம் கொண்டு பாரிஜாத மலரினைக் கொண்டு வர செல்கிறார். பாரிஜாத மலரினை அவர் கொண்டு வரும் முன்பாக அவர் தங்களை ஏமாற்றிவிட்டார் என்று போயதனைப் பரப்பி அவரது உடலினை எரித்து விடுகின்றார் சம்பந்தர்.
பாரிஜாத மலரினைக் கொண்டு வரும் அருணகிரிநாதர், தன் மனித உடல்களுக்கு திரும்ப முடியாமல் கிளிரூபமாகவே இருந்து முருகனின் பெருமைகளைப் பாடுகின்றார். அவரது கந்தரானுபூதி பாடல்கள் அவர் கிளிரூபத்தில் இருக்கும் போது பாடப் பட்டது என்றேக் கொள்ளப்படுகின்றது.
இத்தனை உறுதி செய்யும் வகையில் கோயில் கோபுறத்தில் கிளி ஒன்று உள்ளது.
கோயில் ஸ்தலம்: வேதபுரீஸ்வரர் ஸ்தலம். (செய்யாறு அருகே)

Friday, September 19, 2008

பட்டினத்தார்

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் திருவிடைமருதுரினை அடைகின்றனர். இருவரும் பிச்சை வாங்கி உண்ணும் வழக்கத்தினை கொண்டமையால் இருவரும் கோயிலின் இருபுறத்தில் இருக்கலாம் அப்பொழுது தான் பிச்சை இடுவார்கள் இல்லாவிடில் இருவருக்குமே பிச்சை இடாமல் சென்றிடுவார்கள் என பிரிந்து இரண்டு வாசல்களில் பிச்சை எடுத்து இறைவன் மேல் பற்றுக் கொண்டு வாழ்கின்றனர். பத்திரகிரியார் தாம் பிச்சை எடுத்த உணவுதனை பட்டினத்தாருக்கு முதலில் கொடுத்து விட்டு மிஞ்சியதை தான் உண்பார். அப்படி இருக்கையில் பத்திரகிரியாருடன் ஒரு நாயும் வாஞ்சையாய் இருக்கின்றது ஆதலால் பிச்சை எடுத்த உணவை பட்டினத்தாருக்கும், நாய்க்கும் பின்பு தானுமாக பகிர்ந்து உன்னனத் தொடங்குகிறார். கையேந்தி பிச்சை எடுப்பதை விட ஊர் ஒடுக் கொண்டு பிச்சை எடுத்தால் நிறைய உணவினை பகிர்ந்துக் கொள்ளலாம் என ஓடு
ஒன்றினை வாங்கிக் கொள்கிறார்.
இதனைக் கண்ட பட்டினத்தார் பத்திரகிரியாருக்கு இன்னும் பாசம் விடவில்லை என்பதை உணர்கிறார். தனிடம் வந்து யாசித்த ஒருவனிடம், "என்னிடம் ஏன் யாசிக்கிறாய் நான் சாமியார், கோவிலின் மறுப்பக்கம் செல் அங்கே ஒரு சம்சாரியார் இருக்கிறார் அவரிடம் கேள்" எனக் கூறுகிறார். தன்னிடம் யாசிக்க வந்த நபரின் முலம் இதனை உணர்ந்த பத்திரகிரியார், இவ்வுலகப் பற்று தம்மை விடத்தைக் கண்டு தன் ஓடினை அந்த நாயின் மேல் போட்டு உடைக்கின்றார், நாயும் உயிரினை விடுகின்றது.
பத்திரகிரியார் மேல் பாசம் கொண்ட அந்த நாய் தன் மறுப் பிறவியில் ஒரு மன்னனின் மகளாக பிறக்கின்றது. அவளுக்கு தன் முந்தைய பிறப்பின் ஞாபகம் வர, வளர்ந்த பின்பு பத்திரகிரியாரை திருமணம் முடிக்கும் எண்ணத்தினை பற்றி தன் தந்தையிடம் கூறுகிறார். தன் மகளுடன் திருவிடைமருடுரினை அடையும் மன்னன் பத்திரகிரியாரை தன் மகளினை மணந்துக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றார், அவளும் பத்திரகிரியார் தம்மை மணந்துக் கொள்ளாவிடில் தாம் தற்கொலை செய்துக் கொள்வதாக கூறுகிறார், இவர்களிடம் இருந்து தப்புகின்ற பத்திரகிரியார் கோயிலினுள்ளே ஓடுகின்றார், அவரை இலவரசயும் மன்னனும் துரத்துகின்றனர். அப்ப்போது ஒரு ஜோதி வடிவம் தோன்ற அதனுள்ளே பத்திரகிரியார் நுழைகின்றார், அவரைத் தொடர்ந்து இளவரசியும் மன்னனும் அந்த ஜோதியினுள் நுழைந்து மறைகின்றனர். இத்தனை அறிந்த பட்டினத்தார் "பின் வந்தவன் முன் சென்றான்" எனப் பாடுகின்றார்.

அதன் பின்பு பட்டினத்தார் திருவொற்றிஊரினை அடைகின்றார். அங்கே சிறுவர்களுடன் விளையாடி இறைவனைப் பற்றி அவர்களுக்கு கூறுகிறார். சிறுவர்களுடன் விளையாடுகையில் ஒரு இடத்தில் ஒளிந்து இன்னொரு எடத்திளிரிந்து தோன்றுவார். இவ்வாறு பல அற்புதங்களை செய்து, இறைவனைப் பற்றி மக்களுக்கு உபதேசித்து பற்பல கருத்துக்களை எடுத்துரைத்து வாழ்ந்து வந்த பட்டினத்தார், ஒரு நாள் சிறுவர்களுடன் விளையாடுகையில் சிறுவர்களக் கொண்டு தம்மை ஒரு பெரிய பாத்திரம் கொண்டு மூட சொல்கிறார், அவ்வாறு சிறுவர்கள் செய்கின்றனர், சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால், அங்கே அவர் சிவலிங்கமாக மாறியிருப்பதைக் காண்கின்றனர். பின்பு மக்கள் அந்த சிவலிங்கம் தான் பட்டினத்தார் என்பதை உணர்ந்து அங்கே ஒருக் கோயில்தனை கட்டினர். இவ்வாறாக பட்டினத்தார் என்ற சித்தர் தம் தோற்றத்தின் வேலைகளை செய்து இறைவனிடம் ஐக்கியம் ஆகின்றார்.