Friday, September 19, 2008

பட்டினத்தார்

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் திருவிடைமருதுரினை அடைகின்றனர். இருவரும் பிச்சை வாங்கி உண்ணும் வழக்கத்தினை கொண்டமையால் இருவரும் கோயிலின் இருபுறத்தில் இருக்கலாம் அப்பொழுது தான் பிச்சை இடுவார்கள் இல்லாவிடில் இருவருக்குமே பிச்சை இடாமல் சென்றிடுவார்கள் என பிரிந்து இரண்டு வாசல்களில் பிச்சை எடுத்து இறைவன் மேல் பற்றுக் கொண்டு வாழ்கின்றனர். பத்திரகிரியார் தாம் பிச்சை எடுத்த உணவுதனை பட்டினத்தாருக்கு முதலில் கொடுத்து விட்டு மிஞ்சியதை தான் உண்பார். அப்படி இருக்கையில் பத்திரகிரியாருடன் ஒரு நாயும் வாஞ்சையாய் இருக்கின்றது ஆதலால் பிச்சை எடுத்த உணவை பட்டினத்தாருக்கும், நாய்க்கும் பின்பு தானுமாக பகிர்ந்து உன்னனத் தொடங்குகிறார். கையேந்தி பிச்சை எடுப்பதை விட ஊர் ஒடுக் கொண்டு பிச்சை எடுத்தால் நிறைய உணவினை பகிர்ந்துக் கொள்ளலாம் என ஓடு
ஒன்றினை வாங்கிக் கொள்கிறார்.
இதனைக் கண்ட பட்டினத்தார் பத்திரகிரியாருக்கு இன்னும் பாசம் விடவில்லை என்பதை உணர்கிறார். தனிடம் வந்து யாசித்த ஒருவனிடம், "என்னிடம் ஏன் யாசிக்கிறாய் நான் சாமியார், கோவிலின் மறுப்பக்கம் செல் அங்கே ஒரு சம்சாரியார் இருக்கிறார் அவரிடம் கேள்" எனக் கூறுகிறார். தன்னிடம் யாசிக்க வந்த நபரின் முலம் இதனை உணர்ந்த பத்திரகிரியார், இவ்வுலகப் பற்று தம்மை விடத்தைக் கண்டு தன் ஓடினை அந்த நாயின் மேல் போட்டு உடைக்கின்றார், நாயும் உயிரினை விடுகின்றது.
பத்திரகிரியார் மேல் பாசம் கொண்ட அந்த நாய் தன் மறுப் பிறவியில் ஒரு மன்னனின் மகளாக பிறக்கின்றது. அவளுக்கு தன் முந்தைய பிறப்பின் ஞாபகம் வர, வளர்ந்த பின்பு பத்திரகிரியாரை திருமணம் முடிக்கும் எண்ணத்தினை பற்றி தன் தந்தையிடம் கூறுகிறார். தன் மகளுடன் திருவிடைமருடுரினை அடையும் மன்னன் பத்திரகிரியாரை தன் மகளினை மணந்துக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றார், அவளும் பத்திரகிரியார் தம்மை மணந்துக் கொள்ளாவிடில் தாம் தற்கொலை செய்துக் கொள்வதாக கூறுகிறார், இவர்களிடம் இருந்து தப்புகின்ற பத்திரகிரியார் கோயிலினுள்ளே ஓடுகின்றார், அவரை இலவரசயும் மன்னனும் துரத்துகின்றனர். அப்ப்போது ஒரு ஜோதி வடிவம் தோன்ற அதனுள்ளே பத்திரகிரியார் நுழைகின்றார், அவரைத் தொடர்ந்து இளவரசியும் மன்னனும் அந்த ஜோதியினுள் நுழைந்து மறைகின்றனர். இத்தனை அறிந்த பட்டினத்தார் "பின் வந்தவன் முன் சென்றான்" எனப் பாடுகின்றார்.

அதன் பின்பு பட்டினத்தார் திருவொற்றிஊரினை அடைகின்றார். அங்கே சிறுவர்களுடன் விளையாடி இறைவனைப் பற்றி அவர்களுக்கு கூறுகிறார். சிறுவர்களுடன் விளையாடுகையில் ஒரு இடத்தில் ஒளிந்து இன்னொரு எடத்திளிரிந்து தோன்றுவார். இவ்வாறு பல அற்புதங்களை செய்து, இறைவனைப் பற்றி மக்களுக்கு உபதேசித்து பற்பல கருத்துக்களை எடுத்துரைத்து வாழ்ந்து வந்த பட்டினத்தார், ஒரு நாள் சிறுவர்களுடன் விளையாடுகையில் சிறுவர்களக் கொண்டு தம்மை ஒரு பெரிய பாத்திரம் கொண்டு மூட சொல்கிறார், அவ்வாறு சிறுவர்கள் செய்கின்றனர், சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால், அங்கே அவர் சிவலிங்கமாக மாறியிருப்பதைக் காண்கின்றனர். பின்பு மக்கள் அந்த சிவலிங்கம் தான் பட்டினத்தார் என்பதை உணர்ந்து அங்கே ஒருக் கோயில்தனை கட்டினர். இவ்வாறாக பட்டினத்தார் என்ற சித்தர் தம் தோற்றத்தின் வேலைகளை செய்து இறைவனிடம் ஐக்கியம் ஆகின்றார்.

No comments: