Tuesday, August 18, 2009

வீர ராஜேந்திரன் மெய்க்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்
செங்கோ லோச்சி கருங்களி கடிந்து
தென்னனை தலைகொண்டு சேரனை திரைகொண்டு
சிங்கள தேசம் அடிபடுத்து வெங்களத்து
ஆகவ மல்லனை இம்மடி வேன்கண்டு
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்
முடித்து தன்கழல் அடைந்த மன்னவர்க்கு
கிடாரம் எரிந்து கொடுத்தர்லி
வந்து அடிபணிந்த விசயாத்தற்கு
மண்டலமருலித் தன்னடி அடைந்து
அருளுகின்ற விக்ரமா திதனை
எண்டிசை நிகழக் கண்டிகை சூட்டி
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
எரிந்து கொடுத்தருளிய கூடல் சங்கமத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
விக்கலனையுங் சிக்கனனையும் உடைபுரங் காண்டு
மற்றவன் மகா தேவிய ரோடும்
வஸ்து வாகனங்கை கொண்டு
இரண்டாம் விசையும் குறித்த காலத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்
முடித்து மூன்றாம் விசையும் சொமேச்வரன்
கட்டின கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம்
கம்பிளி சூட்டு கரடிக் கல்லில்
ஜெயஸ்தம்பம் நாட்டித் தேவநாதன் முதல்
மாசா மந்தரை சக்கரக் கோட்டத்துத்
துரத்தி யவர்களுக் குரிய தாரம்
பிடித்துக் குன்ன குச்சியும் மீது
எல்லை கடந்து நிலையிட்டு
விஜய சிம்மா சந்து
உலகமுடை யாளோடும் வீற்றிந்தருளின
கொவிராச கேசரிவன்மரான
உடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு...



2)
ஸ்வஸ்திஸ்ரீ
திருவாளர் திரள்புயத் திருநில வலயந்
தன்மணிப் பூனனத் தாங்கிப் பன்மணிக்
கொன்றவேன் குடைநிழற் குவலயத் துயிர்களைப்
பெற்ற தாயினும் பேணி மற்றுள
அறைகழல அறையர்த்தன் நாடிநிழ லோத்துங்க
உரைபிலத் துடைகளை யோதுங் முறைசெய்து
அரும்பெறல் தமயனை ஆலவந்தானை
இரும்புவி புகழும் ராஜாதி ராஜன்
புகழ் ஒலி மணிமுடி சூட்டித்
தன்திருப் புதல்வனாகிய மதுராந்தகனை
வாலேந்து தானை சொலேந்திரநென
என்திசைத் திகழ எழில்முடி சூட்டித்
தொண்டை மண்டலங்கோடுத் தருளித திண்திறல்
மைந்தனாகிய கங்கை கொண்ட சோழனை
எழுய றியானை சோழபாண்டியன் என்று
ஈண்டுயர் மணிமுடி இசைபெரச் சூடிப்
பான்டிமாண்டளங் கொடுத்தருளி ஆண்டகை
வடிகொண்ட கதிர்வேல் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சொழணெனச் சுடர்முடி சூட்டி
அந்தமில் பெருன்சிரப் பருலித் தன்கிளை
எவ்வேறு உலகத் தவற்குரிய
வேறுவேறு அருளி இகளிமுனை இருந்து
விரைமலர்த் தெரியல விக்கலன் தன்னோடு
வரிசிலத் தடகடகை மாச மாந்தரைக்
கங்கபாடி களத்திடை நின்றுன்
துங்கபத் திரைபுகத் தரத்தி யாங்கவர்
வேங்கைணன் நாட்டிடை மீட்டுமவர் விட்ட
தாங்கரும் பெருவலித் தண்டுகேடத் தாக்கி
மாதண்ட நாயகன் சாமுண்டா பினைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவன்
ஒரு மகளாகிய விருகையன் தேவி
நாகளை என்னுன் தொகயங் சாயலை
முகத்தோடு மூகுவேராக்கிப் பகைத்தேதிர்
மூன்றாம் விசயினும் என்றதிர் பொறுத்து
பரிபவம் தீர்வெனக் கருதிப் போருபுனர்
கூடல் சங்கமத் தாகவ மல்லன்
மக்களாகிய விக்கலன் சிங்கணன்
என்றிவர் தம்மோடு மென்னில் சாமைனதரை
வென்றடு தூசிமுனை விட்டுத் தந்துனை
மன்னருன் தானும் பின்னடுத் திருந்து
வடகட முதலியார் அனைவரும் முதலியார்
கடைகளை கின்றார் கலகியடல்பறிக்
கோசலை சிங்கனக் கொடிபட முன்னர்த்
தொஊசிவேங் களிற்றோடுன் துணித்துக் கேசவ
தண்ட நாயகன் தார்கேத் தரையன்
தின்றார் மாரியன் சினப்போத் தரையன்
நிறேச்சைய நிகல்செஇபோர் கொதைமூ வத்திஎன்று
ஆர்த்தடு துப்பில் அநேகசா மந்தரை
சின்ன பின்னங் செய்து பின்னை
முதலி யான மதுவான னோட
விரித்த தலையோடு விக்கல நோட்
செருத் தொழிலழிந்து சிங்க னோட
அண்ணன் முதலியார் அனைவரும் அமர்போர்ப்
பண்ணிய பகடிழின் தொட நண்ணிய
ஆகவ மல்லனும் அவர்க்கு முன்னோட
வேகவேன் களிற்றினை விளக்கி வாகைகொண்டு
அங்கவர் தாரமும் அவர்குல தனமும்
சங்கும் தொங்கலும் தாரையும் பேரியும்
வெண் சாமரையும் மேக டம்பமும்
சூகரக் கொடியும் மகரதோ ரணமும்
ஒட்டக நிரையும் உலோக சனமும்
புட்புகப் பிடியும் பெருகளிர் றீட்டமும்
பாய்பரித் தொகையோடும் பறித்துச் சேயொளி
வீர்சிங் காதனம் பாற்தொழா வெறி
எழில்தர உலக முழுதுடை யாளோடும்
விசையமணி மகுடம் இசையுடன் சூட்டி
திசைதோறும் செங்கோல் செலுத்தி இசைவின்றி
ததுமாப்புரவி பொத்தப்பி வேந்தனை
வாரனை வணகழர் கேரளன் தன்னைச்
சன்னா தன்றன் தம்பியைப் போர்களைத்
தளங்கள்சூழ்ப் பசுந்தலை யறிந்து பொழன்கழர்
தென்னனைச் சீவல் ள்ளவன்மகன் சிறுவன்
மின்னவில் மணிமுடி வீரகே சரியை
மதவரி யொன்றா லுதைப்பித்து உதகையிர்
கேரளர் தன்குல செங்கீரை யோடும்
வேரர்ரப் பரிந்தோடி மேல்கடல் வீழ
வாரண மருகுளி செலுத்தி வாரியில்
என்னருங் களிஇற்றின் இரட்டைக் கவர்ந்த
கன்னியர் களிர்ரோடுங் கட்டிப் பண்ணுப்
பிடியோடு மாங்கவர் விடுதிரை கொண்டு மீண்டு
கொண்டார் ருறவிர் குரித்தவேம் போரிர்ர்
தண்டனாயகர் தம்மில் தந்திரல்
மல்லியன் நனையு மைஞ்சிப் பயனையும்
பில்குமதக் களிற்றுப் பிரமதேஉன்
தந்தார் asogaiy வனையன் தும் ஒண்திறல்
சத்தியான்னைய்ன் நனையும் சந்திவிக்க் கிரகப்
பத்தியண்ணன் தன்னையும் அத்தகு
தேமரு தெரியல வீமயன் ரன்னையும்
மாமதி வங்காரனையும் நாமவேர்
கண்கணை நுலம்பனைக் காடவர் கோனை

Saturday, August 15, 2009

இரண்டாம் ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொள்ளா புறத்து ஜெயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றன்கரை கொப்பத்து
ஆகா மல்லனை அஞ்சு வித்தவன்
ஆணையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும்
அடங்கக் கொண்டு
விஜயாபிஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கொப்பர கேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

2)
ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தந்தான்
முன்னோன் சேனை பின்னதுவாக
எதமர் பெறாது எண்டிசை நிகழப்
பரியது கறங்கின வார்த்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொல்லாபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தீர் பெருத்த
ஆகவல்லன் தன் அடல்சேனை எல்லாம்
பாராது நிகழப் பசும்பிணம் ஆக்கி
ஆகவல்லன் புரகிட்டோட அவன்
ஆணையும் குதிரையும் ஒட்டக நிறைகளும்
பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து
விபவமும் கொண்டுவா விஜாயபிஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிந்தருலிய
கோபர கேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

3) ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னதுவாக
முன்னேதிர் சென்ற இரட்டபாடி
ஏழரை இல்லகமும் கொண்டு தனானையில்
முன்னனி செல்ல முன்னால் தவிர்த்துக்
கொள்ளபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
எதிரமர் பெறாது எண்டிசை நிகழப்
பரியது கறங்கின வாரத்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொள்ளபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தே
பரியது கரங்க ஆங்கது கேட்டுப்
பெர்ரற்றங் கொப்பத்து வந்து
எதிர் பெருத்த ஆகவ மல்லன்
தன் பெருன்செனை எல்லாம் பட பொறுத்து
பாராது நிகழப் பசும்பின மாக்கி
ஆங்கவன் அஞ்சி புறக்கிடோட
மற்றவன் ஆணையும் குதிரையும்...
ஒட்டகத்தோடு பெண்டிர் பண்டாரமும்
கைக்கொண்டு விஜயாபிஷேகம் பண்ண
வீரசிம்மா சனத்து வீற்றிந்தருலிய
கோப்பரகேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

4)

ஸ்வஸ்திஸ்ரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதேவியர்களாக மீதொளிர்
வெண்குடை வோயர்த்துத் திங்களை பெயரத்துத்துதான்
சிறிய தாதை யாகிய எரிவளி
கங்கைகொண்ட சோழனை போன்கிகள்
இருமுடி சோழநேன்றும் போருமுரன்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
முமுடிச் சோழ தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க்
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வலி தடக்கை மதுராந்தகனிச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகள் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய ராசநேன்றும்
திரு உள்ளத்து அன்போடு கருத்து காதலரும்
இத்தளம் புகழ் ராஜேந்திர சோழனை
உத்தம சோழநேன்றும் தொத்தனி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து
ஏழு உயர் களிற்றுச் சோழ கேரலனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராசநேன்றும் கனைகடல்
பாடிக்கொண்டு பல்புகழ் முடிய்கொண்ட சோழனைச்
சுந்தர சோழநேன்றும் செந்த்தமிழ்
பிடிகளை இரட்ட பாடிகொண்ட சோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கண்ணா
குச்சி றாஜெநேன்றும் பின்னும் தன்
காதலர் காதலர் தன்ம்முள் மேதகு
கதிர்ராங் கனைகழல் மதுராந்தகனை
வேல்படைச் சோழ வல்லப என்று
மானச் சிலைகையோ ரானைசே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமனிச்
சுடர்மணி மகுடங் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினுள் இகல்வேட்டேழுந்து சென்
ட்ரோந்திரல் இரட்ட மண்டல மெய்தி
நதிகளும் நாடும் பதிகளுனநேகமும்
அழிதணன் வளவனென்று மொழிப்பொருள் கேட்டு
வேகவேன்ச் சளுக்கி ஆகவமல்லன்
பரிபவம் எனக்கி தென்றறி விழித்து எழுந்து
செப்பருங் கிர்த்திக் கொப்பத் தகவையில்
உடன்றேதி ரெணறைமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாறித்தான் குஞ்சர முகத்தினும்
தன்திருத் தொடையிளுங் குன்றுறழ் பயத்திலும்
தைக்கவுன் தன்னுடன் கதகளிறு ஏறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையூர்
ற்றோருதனி யநேகம் பொருபடை வழங்கியும்
மொஇம்பமர்சளுக்கி தம்பிஜய சிங்கனும்
போரபுளி கேசியும் தார்தச
மானமன் னவரில் மண்டலி அசொகையனும்
ஆனா வண்புகழ் ஆளுமா ரையனும்
தேனமர் மட்டவி ழலங்கல்மொட் பையனும்
திண்திறல் நனினுலம்பனு மேனுமிவர் முதலியார்
எண்ணிலி யாரைசரை வின்னத்கத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படை துதனும்
கொன்னவில் படைக்குண்ட மயனும் எண்ட்ரியான
வெஞ்சின் வரசரோடன்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து
முன்னுற நெளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பரின் தொடிமேல் கடல் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதப் பகட்டரை சனேகமும்
எட்டுவடை பரிகளும் ஒட்டக நிறைகளும்
வராகநேல் கோடிமுதல் ராசபறிச் சின்னமும்
ஒப்பில் சத்தியாவை சாங்கைப்பையன் என்றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்
இணையான பிறவும் முனைவரிர் கொண்டு
விசையாபிஷேகம் செய்து தென்ரிசைவயிர்
போர்ப்படை நடாத்திக் கார்கடளிள்ளங்கையில்
விரர்படைக் களிங்கமன் வீர்சலா மேகனைக்
கதகளிர் ற்றோடும்படக் கதிர்முடி கடிவித்து
இலங்கையர் கிறைவன் மானாபரணன்
காதலறி இருவரை களத்திடைப் பிடித்து
மாபெரும் புகழ்மிக வளர்த்த
கோப்பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...





முதலாம் ராஜாதிராஜன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
திங்கள் தருதன் தொங்கல்வெண் குடைக்கிழ்
நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து
செங்கோல் லோச்சி கருங்களி கடிந்து தன்
சிறிய தாதையும் திருத்தமாய் யானையும்
குரிகொல்தான் இலங்கோக் களையும் நெறி புனர்
தன் திருபுதல்வர் தமையும் துன்றேழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்கன்
இலங்கையர்க் கிறைவன் போலங்கழர் பல்லவன்
கண்ணா குச்சியர்க் காவலன் எனப் போன்னனிச்
சுடர்மணி மகுடம் சூட்டிப் படர்புகழ்
ஆண்கவற்கு அவர்நாடு அருளிப் பாங்குறு
மாதா டைமுன் வந்த போதலர்
தெரியல விக்கிரம நாரணன்தன் சக்கரன்
அடிபடுத் தருளி கந்தவன் அவதரித்து
ஒருபதாம் நாளால் திருமணி மொவல்லி
வாழியா பஙஎதிர் சோழநேனப் புனைந்து
மன்னுபால் ஊழியுள் தென்னவர் மூவருள்
மான பரணன் பொன்முடி ஆனாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தறிந்து
வாரல வியகழல் வீர கேரலனை
முனைவயிர் பிடித்துதான் ஆணை கிடுவித்து
அத்தி வாரணக் கயிற்றால் உதைப்பித் தருளி
அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன்
கொற்றவேன் குடையும் கற்றைவேன் கவரியும்
சிங்கா தனமும் வெங்களத்து இழிந்து தன்
முடிவிழத் தலைவிரித்து அடித்தளர்ந்தோட
தொல்லை முல்லையூர் துரத்தில் ஒல்கலில்
வேணாத் தரசரை சோணாட்டு ஒதிக்கி
மேவபுகழ் இராமகுட மூவர்கேட முனிந்து
மிடல்கெழு வில்வன் குடர்மடிக் கொண்டுதான்
நாடுவட்டு ஓடிக் காடுபுக்கு ஒலிப்ப
வாஞ்சியம் புதுமலர் மழைநதாங்கு எஞ்சலில்
வேலைகேழு காந்தளுர்ச் சாளைகலம் அருப்பித்து
ஆகவல்லனும் அஞ்சகேவுதான்
தாங்கவரும் படையால் ஆங்கவன் செனையுள்
கண்டப் பையனும் கங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திந்தறல்
விருதர் வாக்கியும் விசையாதிதனும்
தருமுரட் சாங்க மையயனும் முதலினர்
சமர பீருவோத் துடைய நிமிசுடர்
பொன்னோடு ஐந்கறிப் புரவியோடும் பிடித்துத்
தன்னாடை இர்சயங் கொண்டு துனார்
கொள்ளிப் பாக்கை ஒல்லை மடுப்பித்து
ஒருதனித் தண்டால் பொருகடல் இலங்கையர்க்
கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும்
முனரனக்கு உடைந்த தென்றமிழ் மண்டலம்
முழுவதும் இழந்து ஏழ்கடல் ஈழம்
புக்க இலங்கேச னாகிய விக்கிரம
பாண்டியன் புருமணி மகுடமும் காண்டங்கு
தன்னது ஆகிய கன்னக்குச் சியினும்
ஆர்கலி ஈழம் சீரிதென் ரென்னி
உலங்கோல் நாடுதான் நுரவோடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீர்சலா மேகன்
பொருகளத் தன்சிதன் கார்களை றிழந்து
கவையு ரோடிக் காதலி யோடுந்தன்
றவ்வையை பிடித்து தாயை மூகறைய
ஆங்கவ மானம் நீங்குதற் காக
மீண்டும் வந்து வாட்டோழில் புரிந்து
வெங்களத்து உலந்த அச்சிங்கலத் தரிசன்
பொன்னணி முடியும் கன்னரன் வழிவந்து
உரைகோல் ஈழத் தரிசனா கியசீர்
வல்லவன் மதன ராசன் எல்லோலித்
தடமணி முடியும் கொண்டு வடபுலத்து
இருகா லாவதும் பொருபடை நடாத்தி
கண்டரன் தினகரன் நாரணன் கநவதி
வண்டலர் தெரியல மதுசு தனனென்று
எனைப்பல வரையற முனைவைர் றுரத்தி
வம்பலர் தருபொழில் கம்பிளி நகருள்
சாளுக்கிய மாளிகைத் தகர்ப்பித்து இல்லக்கமில்
வில்லவர் மீனவர் வேல்குலச் சாளுக்கியர்
வல்லவர் கொவ்சளர் வங்கனார் கொங்கணர்
சிந்துனர் இயனர் சிங்களர் பங்காளர்
ஆந்திரர் முதலிய அறைசரிடு திரைகளும்
ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்
உகந்துநான் மறையவர் முகந்துகொலக் கொடுத்து
விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று
அஸ்வமேத யாகன்செய் தரசுவீர் றிருந்த
ஜெயம் கொண்ட சோழன் ஒயர்ந்த பெரும்புகழ்
கொவிராச கேசரிபன்மரான
உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு...

முதலாம் ராஜேந்திரன் சோழன் மெய்கீர்த்தி

முதலாம் ராஜேந்திரன் சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழ தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திபத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயன்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்து
ஒலித்தசைய சிங்கன் அளபரும் புகழோடும்
பீடில் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடி வளைய நாமனைக் கோணமும்
வெந்சிலொஐ வீரர் பஞ்சப் பழியும்
பாசுடை பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலத் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்ந கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவ்யுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
யுரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விசா தறதோ ரணமும் முதொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுழ் மாயிரு டிங்கமும்
கலங்க வல்வஇணை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேல்விளிம் பங்கமும்
விளைப்பான் தூருடை வாலிபன் தூறும்
கலமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தெனக் கலர்போழில் மாணக்க வாரமும்
தோடுகடற் காவல் கடுமுரன் கடாரமும்
மாபொரு தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு...

Thursday, April 16, 2009

பாரதி

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு,

தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்

சிந்தனை மாய்த்துவிடு,

யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்

ஊனைச் சிதைத்துவிடு,

ஏகத் திருந்துலகம் - இங்குள்ளயாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு,

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்செத்த உடலாக்கு,

இந்தப் பதர்களையே - நெல்லா மெனஎண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ?

பொய்யாணவஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ? - அம்மா!

பக்திக்கண்ணீர் பெருகாதோ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே - அனைத்திலும்மேவி யிருப்பவளே!

Saturday, April 4, 2009

"எங்களைப் பற்றி"

"எங்களைப் பற்றி"

"ஹாய்" என்று சொல்லிய வண்ணம் வழக்கம் போல் தாமதமாக உள்ளே நுழைந்தார் திரு என்கின்ற திருநாவுக்கரசு. நெற்றி நிறைய திருநீறிட்டு இருக்கும் . பேச்சில் வல்லவர், தித்திக்க பேசி மனம் கவரும் வித்தை தெரிந்து இருப்பதால் ரெயின்போ வானொலியில் பகுதி நேர RJ (Radio Jockey) வாக வேலை செய்கிறார். திருநாவுக்கரசின் எண்ணங்களும் செயல்பாடுகளும் media துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவரது எண்ணங்களையே வெளிப்படுத்தும்.

"வாடா திரு, என்னிக்கு நீ சொன்ன டைமுக்கு வந்திருக்க இன்னைக்கு வரதுக்கு" என்று சொல்லிய வண்ணம் திருவை நோட்டம் விட்டார் அவரது நெருங்கிய நண்பர் ஜோதிவேல் மூர்த்தி. Creative Consulting என்று ஒரு தனியார் கம்பெனி ஒன்றை நடத்துகிறார். வலைத்தளங்கள் உருவாக்கி நிறுவனங்களுக்கு அவர்களது தளங்களை மேம்படுத்துவது தான் இந்த நிறுவனத்தின் தொழில். மேலும் இவரது இன்னோர் நோக்கம் நமது நண்பர் திருநாவுக்கரசரை வாரி விடுவது தான். பேச்சில் மிகவும் வல்லவர்~ இவரது பெருமையை கூர வேண்டும் என்றால் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை படிக்காமலேயே நமது குழுமத்தினில் அனைத்து தலைப்புகளிலும் விளாசும் நபர்.

"வாங்க சார், எங்கேயும் மீட்டிங் இல்லாத காரணத்தால இங்க வந்திடீங்களா அல்லது வழி மாறி இந்தப் பக்கம் வந்துடீங்களா" என்று தன் பங்குக்கு திருவை வாரினார் லக்ஷ்மி மேடம். காரைக்குடி மண்ணை சேர்ந்த நமது குழும மேலாளரிடம் மண் வாசனையுடன் ஒட்டியிருப்பது அந்த அழகிய சிரிப்பு. பெங்களூர் நகரில் செட்டில் ஆகி ஒரு கம்பெனியில் HR துறையில் மேலாளராக பணி புரிகிறார். இவரது யோகம் இவரைப் போலவே எண்ணங்கள் கொண்டிருக்கும் "சுப்பு" அவர்களை கரம் பிடித்தது தான். "சுப்பு சார் + லக்ஷ்மி மேடம்" என்றாலே ஒரு சிறந்த அட்வெஞ்சர் ட்ரிப் என்று தெரிஞ்சுக்கலாம்.

"இல்லை மேடம், டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். வண்டியும் இல்லை பஸ்ல வந்ததுனால லேட் ஆய்டுச்சு" என்று அசடு வழிந்தார் திரு.
"நீங்க வீட்லேர்ந்து நடந்து வந்திருந்தா கூட இந்நேரத்துக்கு வந்திருக்கலாம், சும்மா லேட்டா வந்துட்டு எதையாவது சாக்கு சொல்லாதீங்க" என்றான் நமது குழுவின் இளவல் ஜெயக்குமார். இசையில் மனம் தொலைத்து "கலாஷேத்ரா"வில் பணி புரிகிறார் ஜெயக்குமார்.


"அட, நீ வேற ஜெய், எங்கேயாவது சைட் அடிச்சுட்டு பஸ்ஸ விட்டுருப்பார். அதை இங்க வந்து சமாளிக்க பார்கிறார்" என்று தன் பங்குக்கு திருவை தாளித்தார் ஸ்ரீராம். "எங்க திரு, நேத்திக்கு போன் பண்றேன்னு சொல்லிட்டு ஒரு msg கூட அனுப்பாம இருக்கீங்க" என்றான் ஸ்ரீ.

"இல்ல மச்சி, நேத்திக்கு ஒரு ரெகார்டிங் முடிச்சுட்டு வீட்டுக்கு போறதுக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு, அதான் போன் பண்ண முடியல" என்று சால்ஜாப்பு சொன்னார் நமது திரு.

ஸ்ரீராம் : பார்ப்பதற்கு அப்படியே கல்லுரி மாணவர் போல் இருப்பவன் அனால் அந்த அழகிய வெளிர் முடிகள் ஸ்ரீராமின் வயதினை அதிகமாகவே காட்டுகின்றது. சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்கிறார், "இதோ அதோ" என்று பெங்களூர் மாற்றலுக்கு தயாராக இருக்கின்றார். நமது குழுமத்தினரால் செல்லமாக "வீரத்தளபதியார்" என்றே அழைக்கப் படுபவர்.

ஜோதிவேல் அவர்களின் கைப்பேசி பாட ஆரம்பித்தது.

"ஹலோ"

"ஹலோ ஜோதிவேல், என்னங்க எல்லாரும் வந்துட்டாங்களா"

"ம்ம், எல்லாரும் வந்தாச்சு நீங்க தான் இன்னும் வரக் காணும்"

"இல்லை ஜோதி, ஆபீஸ்ல திடீர்னு கொஞ்சம் வேலை வந்துடுச்சி, இப்ப எல்லாம் ரொம்பவே பிழிஞ்சு எடுக்கறாங்க. அதான் என்னால வர முடியல அப்படின்னு சொல்ல தான் போன் பண்ணினேன். மீட்டிங் முடிஞ்சதும் கால் பண்ணுங்க" என்று சொல்லியபடி போன் கால் கட் ஆனது.


அட வேற யாரும் இல்லைங்க அவர் தான் நமது குழும மேல்லாளர் LK என்று அழைக்கப்படும் L Karthik. உலகத்தில் உள்ள பெரும்பாலான நூல்களைப் படித்திருப்பாரோ என்று எண்ண வைப்பவர். எந்த டாப்பிக் எடுத்தாலும் அதிலே வெளுத்து வாங்குபவர் LK.

இவர்களது உரையாடல்களை கேட்ட வண்ணம் ஸ்நாக்க்ஸை காலி செய்து கொண்டிருந்தேன் நான் - சத்தியன். ஒரு தனியார் வங்கியில் சேல்ஸ் மேனஜராக வேலை செய்கிறேன்.

இதோ இங்கே சென்னையில் உள்ள வூட்லண்ட்ஸ் டிரைவ் உணவகத்தில் சந்திக்கின்றோம். பொன்னியின் செல்வன் குழுமத்தின் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து, அனைவரது எண்ணங்களும் ஒன்றுப் பட்டு இருந்த காரணத்தால் சந்தித்தோம். சோழர்களின் பெருமையை அறிந்துக்கொள்ள வலைப்பதிவுகள் இல்லை, ஒரு சிறந்த வரலாறு அதன் இருப்பிடம் இழந்துக் கொண்டிருக்கிறது, தெற்கு தேய்ந்து வந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது மக்கள் நமது முன்னோர்களின் மேன்மையை கண்டிப்பாக அறிய வேண்டும் என்று பற்பல சிந்தனைகளின் விளைவாக விளைந்தது தான் இந்த .thechozhas.com வலைத்தளம்.

நமது குழுமத்தின் மற்ற உறுப்பினர்கள் :அபிராமி , நந்தக்குமார் : கணினி துறையில் வேலை செய்பவர்கள் என்பதை அடிக்கடி நிருப்பிக்கும் வண்ணம் இவர் செய்வது "cut, copy, paste". எங்கே தேடுகிறார்கள் என்பது நமக்கு தெரியாது ஆனால் இவர்களது பதிவுகள் பயனுள்ள தகவல்கள். முத்து, மணிமாறன், கிருஷ் இவர்கள் அனைவரும் நமது குழுமத்தின் சகாக்கள்.


வீரசோழர்களின் சரித்திரம், தமிழர்களின் பெருமைகள், முன்னோர்களின் வாழ்கை முறை, கலை, கலாச்சாரம் ஆகியவற்றினைப் பற்றிய ஒரு பதிவாக தருகின்றோம் இந்த தளத்தினை. அடுத்த தலைமுறைக்கு நமது மண்ணின் சரித்திரம் தெரிய அதோ எங்கள் பக்கங்கள்... "www.thechozhas.com"

Friday, February 20, 2009

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

என் கன்னி முயற்சியாக இணையத்தில் மொபைலின் படைப்பு...