Sunday, September 21, 2008

திருவண்ணாமலை

அக்கினியின் பொருளாய் வீற்றிருக்கின்றான் அண்ணாமலையான். மக்களிற்கு நேர்கின்ற குறைகளைத் தீயாய் தீர்க்கின்றானோ அவன். அண்ணாமலையானை பாடாத சித்தனும் இல்லை நினையாத பக்த்தனும் இல்லை. பாரதத்தின் அக்கினி ஸ்தலமாகிய அண்ணாமலைக்கு வராதக் கும்பலும் இல்லை. பூலோகத்தில் வீற்றிருக்கும் அண்ணாமலையானை நினையாதோறும் இல்லை.

கார்த்திகை விளக்கீடு
கார்த்திகை மாதத் பௌர்ணமி நாளில் இக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் பொருள் தொன்மையானது.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் தானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. பிரம்மன் அன்னம் உரு எடுத்து ஜோதியின் முடியைக் காண பறந்து சென்றான், விஷ்ணுவோ வராக உருவம் எடுத்து ஜோதியின் அடியினைக் காணச் செல்கின்றான். பிரம்மன் ஜோதியின் தலை தனிக் காணச் செல்கையில், ஒரு தாழம்பூ தனிக் காண்கிறார், ஜோதியின் முடிதனைக் காண இயலாது என்பதனை உணரும் பிரம்மன் தாழம்புதனை தனக்கு சாட்சி சொல்லுமாறு பணித்து, விஷ்ணுவிடம் தான் ஜோதியின் தலை தனிக் கண்டேன் என்றும் தாழபுவே அதற்கு சாட்சி என்றுக் கூறுகிறார். விஷ்ணுவோ தன்னால் ஜோதியின் அடிப்பாகத்தைக் காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார். பிரம்மன் பொய் சொன்னதைக் கண்டு பூலோகத்தில் பிரம்மனுக்கு கோயிலே இல்லாமல் போகட்டும் என்றும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூ தனிக் கொண்டு தன்னை யாரும் அர்ச்சிக்க கூடாது என்றும் சிவன் சாபம் இடுகின்றார். அதுமுதல் ப்ரம்மன்னுக்கு கோயிலே போகின்றது, தாழம்புதனைக் கொண்டு சிவனை யாரும் அர்ச்சிபதும் இல்லை. அவ்வாறு தீபமாய் சிவன் தோன்றியத் ஸ்தலமே திருவண்ணாமலை ஆகும்.

அகந்தை தனை எரித்துக் காத்தருளும் இறையாய் ஜோதியாய் விளங்குகின்றார் சிவன். இந்த ஸ்தலமோ கிருதாயுகத்தில் அக்னியாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், துவாபர யுகத்தில் தங்கமாகவும், கலியுகத்தில் மலையாகவும் உருவெடுக்கின்றது எனப்படுகின்றது. இதனைப் பொருட்டே கார்த்திகை தீபமாகிய சொக்கப் பானை விழா நடக்கின்றது.

அர்த்தநாரீஸ்வரர்

கயிலாயத்தில் ஒரு முறை, பார்வதி தேவியார் விளையாட்டாக சிவனின் கண்களை மூடுகின்றார், இதனால் பூலோகம் அறியாமை என்னும் இருளில் சிக்குகின்றது. இந்த இருள் தனை அகற்றும் பொருட்டு பார்வதி தேவியார் பூலோகத்தில் உள்ள பூவலக் குன்று என்னும் இடத்தினில் இறைவனை வேண்டி தவம் இருக்கின்றார். அத்தவத்தினை மகிசாசுரன் என்போன் கலைக்கப் பார்க்கின்றான். ஆதலால் துர்க்கை அவதாரம் எடுக்கின்ற பார்வதியார், மகிசாசுரனை கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் பிரதோஷ நேரத்தில் வதம் செய்கின்றார். சிவன் ஜோதி ரூபமாய்த் தோன்றி துர்கையை தன்னுள்ளே அகப்படுத்தி அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றார்.

அருணகிரிநாதர்
அண்ணாமலையின் மகிமைதனைக் கூறுகையில் அருணகிரிநாதர் பற்றிக் சொல்லாமல் விட இயலாது. அண்ணாமலை சிவனின் ஸ்தலம் ஆனாலும் அருணகிரிநாதருக்கு இது ஒரு முருகனின் அருட்கடல் கூடிய ஸ்தலமாகும்.

தன் பெற்றோரை எழந்த அருணகிரிநாதர் எந்த வித கொள்கையும் இன்றி கன்னியர் இருக்கும் இடமே சொர்க்கம் என்று அவர்களிடத்தே இருக்கத் தொடங்கினார். அருணகிரிநாதரை திருத்த அவரது சகோதிரியார் மிகவும் பாடுபடுகின்றார் ஆனால் அருணகிரிநாதர் எந்த விதப் பற்றும் இன்றி சிற்றின்பத்தில் ஆழ்ந்துக் கிடந்தார். அவருக்கு தொழு நோயி பிடித்தவுடன் எவரும் அவருக்கு துணை வராமல் போகவே அவமானப் பட்டு அக்காவிடம் சொல்லாமல் அண்ணாமலைக் கோவிலின் கோபுரத்திலிருந்து கிழே விழுந்து உயிர்தனை விடுவதற்காக குதிக்கின்றார், ஆனால் அவன் விருப்பம் இன்றி எந்த செயலும் நிகழ்வதில்லை ஆதலால் அவனே தன் பக்தனை காக்கும் பொருட்டு அங்கே தோன்றி அருனகிரினாதரைக் காப்பாற்றி குனப்படுதிவிட்டு மறைகின்றார். இறைவன் தனை உணர்ந்த அருணகிரிநாதர் முருகன் தாழ் பணிந்து அவன் புகழ் பாடித் தொண்டாற்றுகின்றார்.

அருணகிரிநாதரின் புகழும் பரவுகின்றது, அவர் மேல் பொறாமைக் கொள்கின்றான் சம்பந்தன் என்னும் அமைச்சன். இவன் காளியிடன் பற்பல வரங்களை வாங்கியவன் எனக் கூறப்படுகின்றது. காளியின் தீவிரப் பக்தனாகவும் இருக்கின்றான். சம்பந்தன் மன்னரிடம் யார் இங்கே இறைவனை யார் தோன்ற செய்கிறார்களோ அவனே மேலானவன் என்றுக் கூரி அருணகிரிநாதர் அனைவரையும் ஏமாற்றுகின்றார் என்றும் சொல்கின்றார்.

இதன் பொருட்டு ஏற்ப்பட்ட போட்டியில் அருணகிரிநாதரின் உண்மையான வேண்டுதலின் பொருட்டு அங்கே அவதரித்துக் காட்சியளிக்கின்றார்.

கிளிரூபம்

இத்துடன் சம்பந்தனின் பொறாமை முடியவில்லை, அவன் வஞ்சம் தீர்க்க காத்திருக்கின்றார். ஒரு சமயம் மன்னரின் கண்கள் பழுதடைய, சம்பந்தன் பாரிஜாத மலரினைக் கொண்டு வந்தால் பார்வை கிடைக்கும். அதனைக் கொண்டு வருவதற்கு அருணகிரிநாதரால் மட்டுமே முடியும் என்றுக் கூறுகிறார். இதன் பொருட்டு அருணகிரிநாதர் கிளி உருவம் கொண்டு பாரிஜாத மலரினைக் கொண்டு வர செல்கிறார். பாரிஜாத மலரினை அவர் கொண்டு வரும் முன்பாக அவர் தங்களை ஏமாற்றிவிட்டார் என்று போயதனைப் பரப்பி அவரது உடலினை எரித்து விடுகின்றார் சம்பந்தர்.
பாரிஜாத மலரினைக் கொண்டு வரும் அருணகிரிநாதர், தன் மனித உடல்களுக்கு திரும்ப முடியாமல் கிளிரூபமாகவே இருந்து முருகனின் பெருமைகளைப் பாடுகின்றார். அவரது கந்தரானுபூதி பாடல்கள் அவர் கிளிரூபத்தில் இருக்கும் போது பாடப் பட்டது என்றேக் கொள்ளப்படுகின்றது.
இத்தனை உறுதி செய்யும் வகையில் கோயில் கோபுறத்தில் கிளி ஒன்று உள்ளது.
கோயில் ஸ்தலம்: வேதபுரீஸ்வரர் ஸ்தலம். (செய்யாறு அருகே)

No comments: