Thursday, November 27, 2008

மூன்றாம் குலோத்துங்க சோழன்

இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு கி.பி 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே கி.பி 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது.


முதலாம் பாண்டியப் போர்

ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன்.



எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.

இரண்டாம் பாண்டிய போர்

போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான்.

ஈழப் போர்

சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான்.

கொங்கு நாட்டுப் போர்

ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.

வடநாட்டுப் போர்
காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.

மூன்றாம் பாண்டியப் போர்
விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.
குலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.

இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான்.

குலோத்துங்கனின் சிறப்பு பணிகள்

மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன.
1) திருபுவனம் கோவில்
2) மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன
3) திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான்.
( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்)
4) சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம்
5) நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள்
6) மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது
7) பவனந்தியின் நன்னூல்.

Friday, November 21, 2008

இரண்டாம் இராஜாதிராஜ சோழன்

இரண்டாம் இராஜாதிராஜ சோழன்

விக்கிரம சோழனின் மருமகன் நெறியுடைய பெருமாளின் மகனே நமது எதிரிலிப் பெருமாள் எனப் படுகின்ற இரண்டாம் ராஜாதி ராஜ சோழன். இரண்டாம் ராஜா ராஜ சோழனின் மக்கள் இருவரும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முடியாத சிறு வயதினராய் இருந்தமையால் தனது மைத்துனன் மகனாகிய எதிரிலிப் பெருமாளை இளவரசனாக அறிவித்தான் இரண்டாம் ராஜா ராஜன்.

போர் வீரன்

முதலாம் ராஜாதி ராஜனை போலவே இரண்டாம் ராஜாதி ராஜனும் சிறந்த போர் வீரனாக திகழ்ந்தான். சோழரின் நேர் வாரிசாக இல்லா விடினும் சோழர்களின் திறந்தனைக் கொண்டிருந்தான் இந்த வீரன்.

பாண்டியப் போர்

இரண்டாம் ராஜாதி ராஜனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப் பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்கள்ளுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

குலசேகரப் பாண்டியன் நமது சோழனின் உதவியை நாடினான், பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னன் ஆகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான், அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப் பிடித்தான். இத்தனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றிவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்ப வில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னன் ஆக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இத்தனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். ஆதலால் சிங்கள மன்னன் ஜகத் விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.

சோழர்களின் நுழைவு
அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராஜாதி ராஜனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடன் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.
தோண்டிப் பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்குகும் முதல் போர் ஆரம்பித்தது. முதல் போரில் சிங்களப் படைகள் வெற்றிப் பட்டன. இதனால் சோழ மக்கள் அச்சம் கொண்டனர்.
அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வெற்றிக் கொண்டான். சிங்கள மாதண்ட நாயகனையும், தண்ட நாயகன் ஜகத் விஜயனயும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத் தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாடி வைத்தான். இதனை அடுத்து குலசேகர பாண்டியன் அரியணை ஏறினான்.

சிங்களப் போர்
சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இத்தனை ஒற்றரிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான்.
சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான், அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டும் இல்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சிங்களனின் பாண்டிய உறவு
சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராஜாதி ராஜன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலை தனை அகற்றி அவர்களுக்கு கர்தூன் நாட்டினான்.
இத்தனை அறிந்த சோழன் குலசேகரன் பால் வேங்குண்டேழுந்தான், தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக் கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இத்தனை அடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுப் பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு சிங்கள தேசத்திற்கே ஓடினர். போர்னில் தோற்ற குனசெகரப் பாண்டியனும் சிங்கள தேசத்தில் புகலிடம் அடைந்தான். இத்தனை அடுத்து வீரப் பாண்டியநிர்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன்.

இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராஜாதி ராஜ சோழன்.

இறுதி நாடகள்

சுருங்கிக் கொண்டிருந்த சோழர்களின் வரைப் படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான் இரண்டாம் ராஜாதி ராஜன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று cசோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராஜாதி ராஜன்.

ஆனால் காலங்களின் ஓட்டத்தில் இரண்டாம் ராஜா ராஜனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர் தினவெடுத்தன. ராஜாதி ராஜனின் போர் கலந்த சுற்று சுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரச பீடம் கிடைக்காத என்று ஏங்கினான், இத்தனை அறிந்த ராஜாதி ராஜன் ராஜா ராஜனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரச பதவி அளித்து தெலுங்கு தேசம் சென்றான்.


Wednesday, November 19, 2008

இரண்டாம் ராஜா ராஜ சோழன்

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாம் ராஜ ராஜ சோழன், சோழ சக்கரவர்த்தியாக மகுடம் சூடினான். இவனது ஆட்சிக் காலத்தில் சேரர்களுடனும், பாண்டியர்களுடனும் போர்கள் நடந்திருக்கின்றன. அவை மட்டும் அல்லாமல் இவன் காலத்தே காவிரி நதி நீர் பிரச்சனை ஆரம்பித்து இருக்கின்றது.

சேரப் போர்

இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசா ராசா உலா கூறுகின்றது . இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்று ராசா ராசனுக்கு வாகை சுட்டினான்.

பாண்டியப் போர்

சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான் நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம்.

காவிரி பிரச்சனை :

"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
- இராச ராசா சோழனுலா

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

வைஷ்ணவத் தொன்று

தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தான்.
" விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்"
-என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இவனைத் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ராஜ ராஜேஸ்வரம் :

தன் தந்தையை போல் சிவப் பக்தனாகிய இரண்டாம் ராஜ ராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜெஸ்வரமும் ஒன்றாகும்.
தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவில் தனை கட்டினான். கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஓட்டக்கூத்தார் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான்.

எதிரிளிப் பெருமாள் (இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் )

இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்றப் பட்டப் பெயருடன் அரசனை எரியவன் அரசப் பீடத்தின் நேரடி வாரிசு கிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூடி விட்டு மரணம் அடைந்தான்.

Wednesday, November 12, 2008

காலை 8 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என்று கூரிவிட்டு முகத்தை தீவிரவாதி போல் செய்தித்தாளில் முகத்தினை மறைத்துக் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் நம்து வீரத் தளபதியார் ஸ்ரீராம்.

8 மணிக்கு தான் கிளம்புகின்றார் நமது பிரம்மராயர் ஜோதிவேல் (சோழம்). 5 நிமிடத்தில் சேர்ந்துவிடுவேன் என்று 8 மணி அளவில் கையுன்தியில் தகவல் அனுப்பினேன் நான்(sms thaan). (முதல் நாள் இரவு வரை எனது வருகை எனக்கே முடிவாக வில்லை ஆனால் சோழம் orkut posting பார்த்தவுடன் கண்டிப்பாக போவது என்று முடிவு செய்தேன்).

8.30 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்ந்தோம். ஸூடா காபி பருகிவிட்டு a/c பேருந்திற்காக காத்திருப்பதா அல்லது காத்திருக்கும் ஜெயக்குமார் பொருட்டு சீக்கிரம் கிளம்புவோமா என்று ஒரு சிறிய ஆலோசனைக்கு பிறகு சாதாரண பேருந்தில் கிளம்பினோம். இடையே தனது விற்பனை திறமையை காட்ட முயன்றார் சோழம் அவர்கள். பேருந்தில் வாழை, பூக்கள், அன்னாசி மற்றும் பற்பலவற்றை விற்பனை செய்து தன் திறமையை காட்டினர் சோழம்.

முதற் சந்திப்பு:

வடபழனியில் முதல் தகவல், கிண்டியில் இரண்டாம் தகவல், அடையாரில் அடுத்த தகவல் என்று அடுத்தடுத்த தகவல்களுக்குப் பிறகு திருவான்மியூரில் சரியான பேருந்தை பிடித்தார் ஜெயகுமார். அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே எங்களைக் கண்டு கொண்டார் ஜெயகுமார்.

மாமல்லனின் வரவேற்ப்பு :

பல்லவ பூமியில் கால் பதித்த நொடியில் எங்களை வரவேற்றார் மாமல்லன். விருந்தோம்பல் தமிழர் பண்பாடு என்பதனை நிரூபிக்கும் வகையில் பசியில் இருந்த எங்களுக்கு பசியாற ருசியான பூரியும் கிழங்கும் பரிமாறப் பட்டது. ஆனால் கேட்காமலேயே bill போட்டு தந்துவிட்டார்கள். (உபயம் : ஜோதிவேல் @ சோழம்)

சோழ தேச திட்டம்
சோழ தேசப் பயணத்திற்கான திட்டத்தினை எங்கு அமர்ந்து பேசலாம் என்று யோசித்த வண்ணமே மஹாபலிபுரம் நகரினை வலம் வந்தோம். சுவையான நெல்லிக் கனி, மாங்காய் ஆகியவற்றை சுவைத்த வண்ணம் வலம் வந்தோம். ஆனால் என்ன கையில் இருந்த மாங்காய் coverai target செய்து வந்த வானரம் ஒன்று coverai அடித்து சென்றுவிட்டது. (LK வின் சதியாக இருக்க முடியுமோ என்ன சந்தேகம் எழுந்தது).

இன்னொரு வானரம் அழகாக பாட்டிலில் தண்ணீர் பருகியது காண்பதற்கு அருமையாக இருந்தது. (காண்க: ஸ்ரீராமின் புகைப்படங்கள்).

குழந்தை பருவத்திற்கு மாறினார் சோழம் அவர்கள், தனது வயதையும் மறந்து மலைகளில் வழுக்கிக் கொண்டே எறங்கி வந்தார். கலங்கரை விளக்கு அருகே அமர்ந்து சிந்திக்க இடம் கிடைக்கவில்லை, ஆதலால் ஸ்ரீராமும் சோழம் அவர்களும் குச்சி ஐஸ் வாங்கி தாகம் தனித்துக் கொண்டு பயணத்தினை தொடர்ந்தோம். இவ்வாறாக நால்வர் பேரணி ராயர் கோபுரத்தினை அடைந்தது. நல்ல இடம் பார்த்து அமர்ந்த எங்களுக்கு பருக மோர் கிடைத்தது, தஞ்சை பயணத்தினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.

ஒரு வெள்ளி இரவில் தஞ்சைக்கு கிளம்பி, சனி விடியலில் தஞ்சை கோவில் தரிசனத்தினை முடித்துக் கொண்டு, அங்கிருந்து குடந்தை நகருக்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. அத்துடன் சென்னையிலிருந்தே வாகனம் அமைத்து செல்லலாமா அல்லது தஞ்சை சென்று வாகனம் அமைத்துக் கொள்ளலாமா என்ற ஐயப் பாடு எழுந்தது, இதற்கான விடைதனை எத்தனை நபர்கள் வருகின்றார்கள் என்பதை பொறுத்து முடிவு செய்துக் கொள்ளலாம் என விடப் பட்டது.

தஞ்சை- குடந்தை-கங்கை கொண்ட சோழபுரம்- சென்னை.

மேற்குறிய வண்ணம் பயணத்தினை மேற்கொள்ளலாம் என ஒருமித்தக் கருத்து ஏற்ப்பட்டவுடன் சபை களையலாம் என்று முடிவு செய்து, கிருஷ்ணர் வெண்ணை நோக்கி நகர்ந்தோம்.

ஜோதியின் கலைப் பார்வை

மீண்டும் எங்களை வரவேற்றார் மாமல்லர். அதிகம் உண்டால் களைப்பு ஏற்படும் என்று ஜெயக்குமார் ஐயம் முற்றதால் அனைவரும் தயிர் சாதம் மட்டும் உண்டுவிட்டு கிளம்பினோம்.

அங்கே இருந்த பூம்புகார் அருங்காட்சியகத்தினுள் நுழைந்தோம் நாங்கள். கலைப் பார்வை வேறுபடும் என்பதனை ஜெயக்குமார் நிரூபிக்க எண்ணினாரோ அல்லது இயல்பாக நடந்ததோ தெரியவில்லை ஆனால் சோழம் அவர்களின் என்ன ஓட்டங்கள் அழகாக தெரிய வந்தது. ஜெயக்குமார் இரண்டு பாத்திர வேலைப்பாடு உடைய பொருட்களை வாங்குவதற்கு எண்ணி அலுவலரிடம் bill போட சொன்னார், நமது சோழம் அவர்கள் அவற்றைக் கண்டவுடன்,
"என்ன ஜெயக்குமார் cigarette ashtray வாங்கி விட்டீர்கள" என வினவினார்.

இந்தக் கேள்வியால் சிவநேச பக்தனான ஜெயக்குமார் மிகவும் வாடிப் போனார் என்றே கூரவேண்டும்.

"ஐயா சோழம் அவர்களே, திருநீற்றையும் குங்குமத்தினையும் இதில் போட்டு வைக்கலாமே என்று வாங்குகிறேன், இதை நீங்கள் எப்படி ash tray எண்ணக் கூரலாம்" என ஒருப் பிடி பிடித்தார்.

ஐவர் ரதம் :
பல்லவர்களின் மிக உயரிய கலை வேலைப் பாடுகளைக் கண்ட வண்ணம் நாங்கள் நால்வரும் வலம் வந்தோமே. திடீர் என சோழம் அவர்கள்ளுக்கு குழந்தை பருவ எண்ணங்கள் மேலோங்கிட கண்ணாம் மூச்சி ஆட்டம் விளையாட வேண்டும் என்றார். அவரை ஒருவாறு சரிக்கட்டி, யானை தும்பிக்கையின் பின்னால் மறைந்துக் கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படம் எடுத்தப் பின்னர் தான் அவர் ஓய்ந்தார்.

ஸ்ரீராமின் கலை வெறியில் அனைத்து சிற்ப்பங்களும் அவரது காமெராவிடம் சரண் அடைந்தன. எங்கள் பசிக்கு ஸ்ரீ கொண்டு வந்திருந்த தீபாவளி பலகாரங்கள் காலி ஆயின. ஐவர் ரதம், நாங்கள் நால்வர் மட்டும் வந்து இருந்ததால் எங்களை ஏற்றிக் கொள்ளவில்லை.

கடல் அழைத்தது

இயற்கை அன்னை கடலின் அழைப்பை பெற்று நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கே pant கால்களை மடக்கி கொண்டு ரெடியாக நின்றார் நமது சோழம் அவர்கள். சரி நீச்சல் அடிக்கப் போகின்றார் என நினைத்தால் கரை ஓரத்தில் நின்றுக் கொண்டு ஸ்ரீராமையும் துணைக்கு அழைத்தார் சோழம். கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு, 18:30 குளிர் பேருந்தினை விட்டு விடக் கூடாது என்ற மேலோங்கிய சிந்தனையில் சீகிரமாக நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே ஸூடாக இருந்த பஜ்ஜி எங்களை டீக் கடைப் பக்கம் எழுத்து. அங்கே சென்று கொஞ்சம் பஜ்ஜிகளை கபளிகரம் செய்துவிட்டு, சுவையாக டி பருகி விட்டு மாமல்லை பேருந்து நிலையத்தில் ஆஜர் ஆகினோம் நாங்கள். a/c பஸ் சரியாக குறிக்கப் பட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்தது, அதில் ஏறி ஜெயக்குமார் seat பிடிக்க, நாங்கள் நால்வரும் சொகுசாக சென்னை மாநகரை நோக்கி பயணத்தினை தொடர்ந்தோம்.

Friday, November 7, 2008

ராமானுஜர்

குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ராமானுஜர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.

சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைனவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுஜனுக்கும் ஏற்ப்பட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுஜர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விஷ்ணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவ ஸ்தலமாக உள்ள இடத்தில் விஷ்ணு சிலை இருப்பது சிவ ஸ்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விஷ்ணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுஜர்.

விஷ்ணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லக்ஷ்மி கடாட்சம் அகன்று விடும் என்றும் விஷ்ணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலை தனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விஷ்ணுவின் புகழ் பாடிய ராமனுஜநிற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண் பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விஷ்ணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விஷ்ணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விஷ்ணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுஜநிற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுஜர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விஷ்ணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார்.

Saturday, November 1, 2008

தில்லைத் திருப்பணி
தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நானுமாறு நார்பெருன்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரை சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார்.


சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன்
மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாம கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுருத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்.

கடல் கொண்ட திருமால்

இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிருவம்ப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முர்ப்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையுறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளிக் கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூததன் கூறுகின்றார்.