Saturday, August 15, 2009

இரண்டாம் ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொள்ளா புறத்து ஜெயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றன்கரை கொப்பத்து
ஆகா மல்லனை அஞ்சு வித்தவன்
ஆணையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும்
அடங்கக் கொண்டு
விஜயாபிஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கொப்பர கேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

2)
ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தந்தான்
முன்னோன் சேனை பின்னதுவாக
எதமர் பெறாது எண்டிசை நிகழப்
பரியது கறங்கின வார்த்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொல்லாபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தீர் பெருத்த
ஆகவல்லன் தன் அடல்சேனை எல்லாம்
பாராது நிகழப் பசும்பிணம் ஆக்கி
ஆகவல்லன் புரகிட்டோட அவன்
ஆணையும் குதிரையும் ஒட்டக நிறைகளும்
பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து
விபவமும் கொண்டுவா விஜாயபிஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிந்தருலிய
கோபர கேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

3) ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னதுவாக
முன்னேதிர் சென்ற இரட்டபாடி
ஏழரை இல்லகமும் கொண்டு தனானையில்
முன்னனி செல்ல முன்னால் தவிர்த்துக்
கொள்ளபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
எதிரமர் பெறாது எண்டிசை நிகழப்
பரியது கறங்கின வாரத்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொள்ளபுரத்து ஜெயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தே
பரியது கரங்க ஆங்கது கேட்டுப்
பெர்ரற்றங் கொப்பத்து வந்து
எதிர் பெருத்த ஆகவ மல்லன்
தன் பெருன்செனை எல்லாம் பட பொறுத்து
பாராது நிகழப் பசும்பின மாக்கி
ஆங்கவன் அஞ்சி புறக்கிடோட
மற்றவன் ஆணையும் குதிரையும்...
ஒட்டகத்தோடு பெண்டிர் பண்டாரமும்
கைக்கொண்டு விஜயாபிஷேகம் பண்ண
வீரசிம்மா சனத்து வீற்றிந்தருலிய
கோப்பரகேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...

4)

ஸ்வஸ்திஸ்ரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதேவியர்களாக மீதொளிர்
வெண்குடை வோயர்த்துத் திங்களை பெயரத்துத்துதான்
சிறிய தாதை யாகிய எரிவளி
கங்கைகொண்ட சோழனை போன்கிகள்
இருமுடி சோழநேன்றும் போருமுரன்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
முமுடிச் சோழ தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க்
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வலி தடக்கை மதுராந்தகனிச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகள் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய ராசநேன்றும்
திரு உள்ளத்து அன்போடு கருத்து காதலரும்
இத்தளம் புகழ் ராஜேந்திர சோழனை
உத்தம சோழநேன்றும் தொத்தனி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து
ஏழு உயர் களிற்றுச் சோழ கேரலனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராசநேன்றும் கனைகடல்
பாடிக்கொண்டு பல்புகழ் முடிய்கொண்ட சோழனைச்
சுந்தர சோழநேன்றும் செந்த்தமிழ்
பிடிகளை இரட்ட பாடிகொண்ட சோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கண்ணா
குச்சி றாஜெநேன்றும் பின்னும் தன்
காதலர் காதலர் தன்ம்முள் மேதகு
கதிர்ராங் கனைகழல் மதுராந்தகனை
வேல்படைச் சோழ வல்லப என்று
மானச் சிலைகையோ ரானைசே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமனிச்
சுடர்மணி மகுடங் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினுள் இகல்வேட்டேழுந்து சென்
ட்ரோந்திரல் இரட்ட மண்டல மெய்தி
நதிகளும் நாடும் பதிகளுனநேகமும்
அழிதணன் வளவனென்று மொழிப்பொருள் கேட்டு
வேகவேன்ச் சளுக்கி ஆகவமல்லன்
பரிபவம் எனக்கி தென்றறி விழித்து எழுந்து
செப்பருங் கிர்த்திக் கொப்பத் தகவையில்
உடன்றேதி ரெணறைமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாறித்தான் குஞ்சர முகத்தினும்
தன்திருத் தொடையிளுங் குன்றுறழ் பயத்திலும்
தைக்கவுன் தன்னுடன் கதகளிறு ஏறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையூர்
ற்றோருதனி யநேகம் பொருபடை வழங்கியும்
மொஇம்பமர்சளுக்கி தம்பிஜய சிங்கனும்
போரபுளி கேசியும் தார்தச
மானமன் னவரில் மண்டலி அசொகையனும்
ஆனா வண்புகழ் ஆளுமா ரையனும்
தேனமர் மட்டவி ழலங்கல்மொட் பையனும்
திண்திறல் நனினுலம்பனு மேனுமிவர் முதலியார்
எண்ணிலி யாரைசரை வின்னத்கத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படை துதனும்
கொன்னவில் படைக்குண்ட மயனும் எண்ட்ரியான
வெஞ்சின் வரசரோடன்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து
முன்னுற நெளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பரின் தொடிமேல் கடல் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதப் பகட்டரை சனேகமும்
எட்டுவடை பரிகளும் ஒட்டக நிறைகளும்
வராகநேல் கோடிமுதல் ராசபறிச் சின்னமும்
ஒப்பில் சத்தியாவை சாங்கைப்பையன் என்றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்
இணையான பிறவும் முனைவரிர் கொண்டு
விசையாபிஷேகம் செய்து தென்ரிசைவயிர்
போர்ப்படை நடாத்திக் கார்கடளிள்ளங்கையில்
விரர்படைக் களிங்கமன் வீர்சலா மேகனைக்
கதகளிர் ற்றோடும்படக் கதிர்முடி கடிவித்து
இலங்கையர் கிறைவன் மானாபரணன்
காதலறி இருவரை களத்திடைப் பிடித்து
மாபெரும் புகழ்மிக வளர்த்த
கோப்பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர்க்கு யாண்டு...





No comments: