Saturday, August 15, 2009

முதலாம் ராஜாதிராஜன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
திங்கள் தருதன் தொங்கல்வெண் குடைக்கிழ்
நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து
செங்கோல் லோச்சி கருங்களி கடிந்து தன்
சிறிய தாதையும் திருத்தமாய் யானையும்
குரிகொல்தான் இலங்கோக் களையும் நெறி புனர்
தன் திருபுதல்வர் தமையும் துன்றேழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்கன்
இலங்கையர்க் கிறைவன் போலங்கழர் பல்லவன்
கண்ணா குச்சியர்க் காவலன் எனப் போன்னனிச்
சுடர்மணி மகுடம் சூட்டிப் படர்புகழ்
ஆண்கவற்கு அவர்நாடு அருளிப் பாங்குறு
மாதா டைமுன் வந்த போதலர்
தெரியல விக்கிரம நாரணன்தன் சக்கரன்
அடிபடுத் தருளி கந்தவன் அவதரித்து
ஒருபதாம் நாளால் திருமணி மொவல்லி
வாழியா பஙஎதிர் சோழநேனப் புனைந்து
மன்னுபால் ஊழியுள் தென்னவர் மூவருள்
மான பரணன் பொன்முடி ஆனாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தறிந்து
வாரல வியகழல் வீர கேரலனை
முனைவயிர் பிடித்துதான் ஆணை கிடுவித்து
அத்தி வாரணக் கயிற்றால் உதைப்பித் தருளி
அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன்
கொற்றவேன் குடையும் கற்றைவேன் கவரியும்
சிங்கா தனமும் வெங்களத்து இழிந்து தன்
முடிவிழத் தலைவிரித்து அடித்தளர்ந்தோட
தொல்லை முல்லையூர் துரத்தில் ஒல்கலில்
வேணாத் தரசரை சோணாட்டு ஒதிக்கி
மேவபுகழ் இராமகுட மூவர்கேட முனிந்து
மிடல்கெழு வில்வன் குடர்மடிக் கொண்டுதான்
நாடுவட்டு ஓடிக் காடுபுக்கு ஒலிப்ப
வாஞ்சியம் புதுமலர் மழைநதாங்கு எஞ்சலில்
வேலைகேழு காந்தளுர்ச் சாளைகலம் அருப்பித்து
ஆகவல்லனும் அஞ்சகேவுதான்
தாங்கவரும் படையால் ஆங்கவன் செனையுள்
கண்டப் பையனும் கங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திந்தறல்
விருதர் வாக்கியும் விசையாதிதனும்
தருமுரட் சாங்க மையயனும் முதலினர்
சமர பீருவோத் துடைய நிமிசுடர்
பொன்னோடு ஐந்கறிப் புரவியோடும் பிடித்துத்
தன்னாடை இர்சயங் கொண்டு துனார்
கொள்ளிப் பாக்கை ஒல்லை மடுப்பித்து
ஒருதனித் தண்டால் பொருகடல் இலங்கையர்க்
கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும்
முனரனக்கு உடைந்த தென்றமிழ் மண்டலம்
முழுவதும் இழந்து ஏழ்கடல் ஈழம்
புக்க இலங்கேச னாகிய விக்கிரம
பாண்டியன் புருமணி மகுடமும் காண்டங்கு
தன்னது ஆகிய கன்னக்குச் சியினும்
ஆர்கலி ஈழம் சீரிதென் ரென்னி
உலங்கோல் நாடுதான் நுரவோடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீர்சலா மேகன்
பொருகளத் தன்சிதன் கார்களை றிழந்து
கவையு ரோடிக் காதலி யோடுந்தன்
றவ்வையை பிடித்து தாயை மூகறைய
ஆங்கவ மானம் நீங்குதற் காக
மீண்டும் வந்து வாட்டோழில் புரிந்து
வெங்களத்து உலந்த அச்சிங்கலத் தரிசன்
பொன்னணி முடியும் கன்னரன் வழிவந்து
உரைகோல் ஈழத் தரிசனா கியசீர்
வல்லவன் மதன ராசன் எல்லோலித்
தடமணி முடியும் கொண்டு வடபுலத்து
இருகா லாவதும் பொருபடை நடாத்தி
கண்டரன் தினகரன் நாரணன் கநவதி
வண்டலர் தெரியல மதுசு தனனென்று
எனைப்பல வரையற முனைவைர் றுரத்தி
வம்பலர் தருபொழில் கம்பிளி நகருள்
சாளுக்கிய மாளிகைத் தகர்ப்பித்து இல்லக்கமில்
வில்லவர் மீனவர் வேல்குலச் சாளுக்கியர்
வல்லவர் கொவ்சளர் வங்கனார் கொங்கணர்
சிந்துனர் இயனர் சிங்களர் பங்காளர்
ஆந்திரர் முதலிய அறைசரிடு திரைகளும்
ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்
உகந்துநான் மறையவர் முகந்துகொலக் கொடுத்து
விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று
அஸ்வமேத யாகன்செய் தரசுவீர் றிருந்த
ஜெயம் கொண்ட சோழன் ஒயர்ந்த பெரும்புகழ்
கொவிராச கேசரிபன்மரான
உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு...

No comments: