Sunday, December 14, 2008

மூன்றாம் ராஜேந்திர சோழன்

"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.

முதலாம் பாண்டிய போர்

தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.

போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்

வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.

தெலுங்கு சோழர்களுடன் நட்பு

மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.

போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை

குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்

பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

No comments: