Wednesday, November 19, 2008

இரண்டாம் ராஜா ராஜ சோழன்

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாம் ராஜ ராஜ சோழன், சோழ சக்கரவர்த்தியாக மகுடம் சூடினான். இவனது ஆட்சிக் காலத்தில் சேரர்களுடனும், பாண்டியர்களுடனும் போர்கள் நடந்திருக்கின்றன. அவை மட்டும் அல்லாமல் இவன் காலத்தே காவிரி நதி நீர் பிரச்சனை ஆரம்பித்து இருக்கின்றது.

சேரப் போர்

இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசா ராசா உலா கூறுகின்றது . இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்று ராசா ராசனுக்கு வாகை சுட்டினான்.

பாண்டியப் போர்

சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான் நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம்.

காவிரி பிரச்சனை :

"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
- இராச ராசா சோழனுலா

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

வைஷ்ணவத் தொன்று

தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தான்.
" விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்"
-என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இவனைத் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ராஜ ராஜேஸ்வரம் :

தன் தந்தையை போல் சிவப் பக்தனாகிய இரண்டாம் ராஜ ராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜெஸ்வரமும் ஒன்றாகும்.
தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவில் தனை கட்டினான். கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஓட்டக்கூத்தார் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான்.

எதிரிளிப் பெருமாள் (இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் )

இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்றப் பட்டப் பெயருடன் அரசனை எரியவன் அரசப் பீடத்தின் நேரடி வாரிசு கிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூடி விட்டு மரணம் அடைந்தான்.

No comments: