Wednesday, November 12, 2008

காலை 8 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என்று கூரிவிட்டு முகத்தை தீவிரவாதி போல் செய்தித்தாளில் முகத்தினை மறைத்துக் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் நம்து வீரத் தளபதியார் ஸ்ரீராம்.

8 மணிக்கு தான் கிளம்புகின்றார் நமது பிரம்மராயர் ஜோதிவேல் (சோழம்). 5 நிமிடத்தில் சேர்ந்துவிடுவேன் என்று 8 மணி அளவில் கையுன்தியில் தகவல் அனுப்பினேன் நான்(sms thaan). (முதல் நாள் இரவு வரை எனது வருகை எனக்கே முடிவாக வில்லை ஆனால் சோழம் orkut posting பார்த்தவுடன் கண்டிப்பாக போவது என்று முடிவு செய்தேன்).

8.30 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்ந்தோம். ஸூடா காபி பருகிவிட்டு a/c பேருந்திற்காக காத்திருப்பதா அல்லது காத்திருக்கும் ஜெயக்குமார் பொருட்டு சீக்கிரம் கிளம்புவோமா என்று ஒரு சிறிய ஆலோசனைக்கு பிறகு சாதாரண பேருந்தில் கிளம்பினோம். இடையே தனது விற்பனை திறமையை காட்ட முயன்றார் சோழம் அவர்கள். பேருந்தில் வாழை, பூக்கள், அன்னாசி மற்றும் பற்பலவற்றை விற்பனை செய்து தன் திறமையை காட்டினர் சோழம்.

முதற் சந்திப்பு:

வடபழனியில் முதல் தகவல், கிண்டியில் இரண்டாம் தகவல், அடையாரில் அடுத்த தகவல் என்று அடுத்தடுத்த தகவல்களுக்குப் பிறகு திருவான்மியூரில் சரியான பேருந்தை பிடித்தார் ஜெயகுமார். அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே எங்களைக் கண்டு கொண்டார் ஜெயகுமார்.

மாமல்லனின் வரவேற்ப்பு :

பல்லவ பூமியில் கால் பதித்த நொடியில் எங்களை வரவேற்றார் மாமல்லன். விருந்தோம்பல் தமிழர் பண்பாடு என்பதனை நிரூபிக்கும் வகையில் பசியில் இருந்த எங்களுக்கு பசியாற ருசியான பூரியும் கிழங்கும் பரிமாறப் பட்டது. ஆனால் கேட்காமலேயே bill போட்டு தந்துவிட்டார்கள். (உபயம் : ஜோதிவேல் @ சோழம்)

சோழ தேச திட்டம்
சோழ தேசப் பயணத்திற்கான திட்டத்தினை எங்கு அமர்ந்து பேசலாம் என்று யோசித்த வண்ணமே மஹாபலிபுரம் நகரினை வலம் வந்தோம். சுவையான நெல்லிக் கனி, மாங்காய் ஆகியவற்றை சுவைத்த வண்ணம் வலம் வந்தோம். ஆனால் என்ன கையில் இருந்த மாங்காய் coverai target செய்து வந்த வானரம் ஒன்று coverai அடித்து சென்றுவிட்டது. (LK வின் சதியாக இருக்க முடியுமோ என்ன சந்தேகம் எழுந்தது).

இன்னொரு வானரம் அழகாக பாட்டிலில் தண்ணீர் பருகியது காண்பதற்கு அருமையாக இருந்தது. (காண்க: ஸ்ரீராமின் புகைப்படங்கள்).

குழந்தை பருவத்திற்கு மாறினார் சோழம் அவர்கள், தனது வயதையும் மறந்து மலைகளில் வழுக்கிக் கொண்டே எறங்கி வந்தார். கலங்கரை விளக்கு அருகே அமர்ந்து சிந்திக்க இடம் கிடைக்கவில்லை, ஆதலால் ஸ்ரீராமும் சோழம் அவர்களும் குச்சி ஐஸ் வாங்கி தாகம் தனித்துக் கொண்டு பயணத்தினை தொடர்ந்தோம். இவ்வாறாக நால்வர் பேரணி ராயர் கோபுரத்தினை அடைந்தது. நல்ல இடம் பார்த்து அமர்ந்த எங்களுக்கு பருக மோர் கிடைத்தது, தஞ்சை பயணத்தினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.

ஒரு வெள்ளி இரவில் தஞ்சைக்கு கிளம்பி, சனி விடியலில் தஞ்சை கோவில் தரிசனத்தினை முடித்துக் கொண்டு, அங்கிருந்து குடந்தை நகருக்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. அத்துடன் சென்னையிலிருந்தே வாகனம் அமைத்து செல்லலாமா அல்லது தஞ்சை சென்று வாகனம் அமைத்துக் கொள்ளலாமா என்ற ஐயப் பாடு எழுந்தது, இதற்கான விடைதனை எத்தனை நபர்கள் வருகின்றார்கள் என்பதை பொறுத்து முடிவு செய்துக் கொள்ளலாம் என விடப் பட்டது.

தஞ்சை- குடந்தை-கங்கை கொண்ட சோழபுரம்- சென்னை.

மேற்குறிய வண்ணம் பயணத்தினை மேற்கொள்ளலாம் என ஒருமித்தக் கருத்து ஏற்ப்பட்டவுடன் சபை களையலாம் என்று முடிவு செய்து, கிருஷ்ணர் வெண்ணை நோக்கி நகர்ந்தோம்.

ஜோதியின் கலைப் பார்வை

மீண்டும் எங்களை வரவேற்றார் மாமல்லர். அதிகம் உண்டால் களைப்பு ஏற்படும் என்று ஜெயக்குமார் ஐயம் முற்றதால் அனைவரும் தயிர் சாதம் மட்டும் உண்டுவிட்டு கிளம்பினோம்.

அங்கே இருந்த பூம்புகார் அருங்காட்சியகத்தினுள் நுழைந்தோம் நாங்கள். கலைப் பார்வை வேறுபடும் என்பதனை ஜெயக்குமார் நிரூபிக்க எண்ணினாரோ அல்லது இயல்பாக நடந்ததோ தெரியவில்லை ஆனால் சோழம் அவர்களின் என்ன ஓட்டங்கள் அழகாக தெரிய வந்தது. ஜெயக்குமார் இரண்டு பாத்திர வேலைப்பாடு உடைய பொருட்களை வாங்குவதற்கு எண்ணி அலுவலரிடம் bill போட சொன்னார், நமது சோழம் அவர்கள் அவற்றைக் கண்டவுடன்,
"என்ன ஜெயக்குமார் cigarette ashtray வாங்கி விட்டீர்கள" என வினவினார்.

இந்தக் கேள்வியால் சிவநேச பக்தனான ஜெயக்குமார் மிகவும் வாடிப் போனார் என்றே கூரவேண்டும்.

"ஐயா சோழம் அவர்களே, திருநீற்றையும் குங்குமத்தினையும் இதில் போட்டு வைக்கலாமே என்று வாங்குகிறேன், இதை நீங்கள் எப்படி ash tray எண்ணக் கூரலாம்" என ஒருப் பிடி பிடித்தார்.

ஐவர் ரதம் :
பல்லவர்களின் மிக உயரிய கலை வேலைப் பாடுகளைக் கண்ட வண்ணம் நாங்கள் நால்வரும் வலம் வந்தோமே. திடீர் என சோழம் அவர்கள்ளுக்கு குழந்தை பருவ எண்ணங்கள் மேலோங்கிட கண்ணாம் மூச்சி ஆட்டம் விளையாட வேண்டும் என்றார். அவரை ஒருவாறு சரிக்கட்டி, யானை தும்பிக்கையின் பின்னால் மறைந்துக் கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படம் எடுத்தப் பின்னர் தான் அவர் ஓய்ந்தார்.

ஸ்ரீராமின் கலை வெறியில் அனைத்து சிற்ப்பங்களும் அவரது காமெராவிடம் சரண் அடைந்தன. எங்கள் பசிக்கு ஸ்ரீ கொண்டு வந்திருந்த தீபாவளி பலகாரங்கள் காலி ஆயின. ஐவர் ரதம், நாங்கள் நால்வர் மட்டும் வந்து இருந்ததால் எங்களை ஏற்றிக் கொள்ளவில்லை.

கடல் அழைத்தது

இயற்கை அன்னை கடலின் அழைப்பை பெற்று நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கே pant கால்களை மடக்கி கொண்டு ரெடியாக நின்றார் நமது சோழம் அவர்கள். சரி நீச்சல் அடிக்கப் போகின்றார் என நினைத்தால் கரை ஓரத்தில் நின்றுக் கொண்டு ஸ்ரீராமையும் துணைக்கு அழைத்தார் சோழம். கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு, 18:30 குளிர் பேருந்தினை விட்டு விடக் கூடாது என்ற மேலோங்கிய சிந்தனையில் சீகிரமாக நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே ஸூடாக இருந்த பஜ்ஜி எங்களை டீக் கடைப் பக்கம் எழுத்து. அங்கே சென்று கொஞ்சம் பஜ்ஜிகளை கபளிகரம் செய்துவிட்டு, சுவையாக டி பருகி விட்டு மாமல்லை பேருந்து நிலையத்தில் ஆஜர் ஆகினோம் நாங்கள். a/c பஸ் சரியாக குறிக்கப் பட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்தது, அதில் ஏறி ஜெயக்குமார் seat பிடிக்க, நாங்கள் நால்வரும் சொகுசாக சென்னை மாநகரை நோக்கி பயணத்தினை தொடர்ந்தோம்.

No comments: