Friday, November 7, 2008

ராமானுஜர்

குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ராமானுஜர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.

சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைனவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுஜனுக்கும் ஏற்ப்பட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுஜர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விஷ்ணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவ ஸ்தலமாக உள்ள இடத்தில் விஷ்ணு சிலை இருப்பது சிவ ஸ்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விஷ்ணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுஜர்.

விஷ்ணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லக்ஷ்மி கடாட்சம் அகன்று விடும் என்றும் விஷ்ணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலை தனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விஷ்ணுவின் புகழ் பாடிய ராமனுஜநிற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண் பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விஷ்ணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விஷ்ணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விஷ்ணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுஜநிற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுஜர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விஷ்ணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார்.

No comments: